- Advertisement -
இந்திய கிரிக்கெட்

37 வயசுல தினேஷ் கார்த்திக்கே திரும்பி வந்து விளையாடும்போது. இவர் ஆடக்கூடாதா? – முன்னாள் வீரர் அதிரடி

அண்மையில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்து நாடு திரும்பியுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக கடைசி நேரத்தில் அணியில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஜெயதே உனட்கட்டிற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களம் கண்ட உனட்கட் சிறப்பான செயல்பாட்டை வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டினை பெற்றார். கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அந்த அறிமுகப்போட்டியோடு இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.

- Advertisement -

அதன் பிறகும் தனது முயற்சியை எந்த இடத்திலும் கைவிடாத உனட்கட் சௌராஷ்டிரா அணிக்காக 2019-ஆம் ஆண்டு மட்டும் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணி ரஞ்சிக்கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். இப்படி மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவர் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலாக பந்து வீசியிருந்தார். இதன் காரணமாக அடுத்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஜெயதேவ் உனக்கட் இடம்பெற வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கார்சன் காவ்ரி தனது கருத்தினை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் உனட்கட் இடம் பிடித்துள்ளார். என்னை பொறுத்தவரை வயது என்பது ஒரு நம்பர் மட்டும் தான். ஏனெனில் அவர் இத்தனை ஆண்டு காலமாக இந்திய அணியில் இடம் பிடிக்கவே கடுமையான போராட்டத்தை நிகழ்த்தி 12 ஆண்டுகளுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

உள்ளூர் கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் அவர் மிகச் சிறப்பாக தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியில் 37 வயதில் கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் டி20 உலக கோப்பையிலே விளையாடும் பொழுது ஜெயதேவ் உனட்கட் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடக்கூடாது அவர் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அளவிற்கு முழு உடல் தகுதியோடுதான் இருக்கிறார்.

இதையும் படிங்க : என்னோட மொத்த கேரியரும் இந்த ஆட்டோகிராஃப்ல இருக்கு – 12 வருட பொக்கிஷத்தை பகிர்ந்த ஜெயதேவ் உனட்கட்

எனவே அவரை அடுத்த தொடரில் இருந்து நீக்காமல் நிச்சயம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவரை விளையாட வைக்க வேண்டும் என்றும் இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு ஜெயதேவ் உனட்கட் தகுதியான ஒருவர் என்றும் தனது ஆதரவினை அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by