மெதுவாக விளையாட 20 லட்சம். நிரூபனமான சூதாட்டம். வீரர்கள் கைது – அதிர்ச்சி தகவல்

KPL

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரிமியர் டி20 லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் போன்று கர்நாடகாவிலும் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான கர்நாடக பிரீமியர் லீக் டி20 தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.

Gautham

இந்த தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் மீது புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த கிரைம் பிரிவு போலீசார் கவுதம் மற்றும் அப்ரார் காஸி ஆகிய இரண்டு வீரர்களை இன்று காலை கைது செய்தது. கௌதம் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். அப்ரார் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.

இவர்கள் இருவரையும் கைது செய்த கூடுதல் கமிஷனர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணையின் முடிவில் மேலும் சில வீரர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கர்நாடக பிரீமியர் இறுதிப் போட்டியில் முன்பே முடிவைத் தீர்மானித்து பெல்லாரி அணி வீரர்கள் பொறுமையாக பேட்டிங் செய்வதற்காக 20 லட்சம் ரூபாயை இவர்கள் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Abrar

இந்த குற்றத்தை ஒத்துக் கொண்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்கள் மீது பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கௌதம் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேட்ச் பிக்சிங்கில் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் தற்போது கர்நாடக கிரிக்கெட் அணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -