கிரிக்கெட் என்பது ஒரு பேட்ஸ்மேன் கேம் ஆனால் ஐ பி எல் மூலம் அது இப்போது பௌலர்கள் ஆட்டமாக மாறிவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல வேக பந்து வீச்சாளரானக கபில் தேவ் தெரிவித்துள்ளார் சமீபத்தில் மும்பையில் கிரேமேட்டர் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் காமெடி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது.
இந்த ஆண்டு ஐ .பி. எல் போட்டி தொடங்கியது முதல் ஸ்பின்னர்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதுவும் தாங்கள் ஆடும் போட்டியை வைத்து தங்களது பந்து வீசும் முறையை மாற்றிக்கொள்கின்றனர்.ஆனால் இந்த ஐ பி எல் போட்டியில் ஸ்பின்னர்கள் தான் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக பஞ்சாப் அணியில் ஆடிவரும் அஷ்வின் தனது பந்து வீசும் முறையை மாற்றிக்கொண்டு விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
அதே போன்று கடந்து ஆண்டு வரை சென்னை அணிக்காக ஆடிய அஸ்வின் தற்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.மேலும் இதில் அனிமல் எனப்படும் கிரிஷ் கெய்லும் பேட்டிங்கில் தெறிக்க விட்டு வருகிறார்.இதனால் பஞ்சாப் அணி ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.இது பற்றி பேசிய கபில் தேவ் பஞ்சாப் அணியின் கேப்டன் கூட முதலில் ஆப் சபின்னராக இருந்த அஸ்வின் தற்போது லெக் ஸ்பின்னராக மாறி விட்டார்.
இதனால் தான் அந்த அணி தொடர்ந்து வெற்றியை குவித்து வருகிறது என்றும். அதனால் தான் வேகப்பந்து வீச்சா ளர்களை காட்டிலும் சபின்னர்கள் அதிக விக்கெட்டுகளை குவித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.மேலும் இந்த ஐ பி எல் ஸ்பின்னர்களுக்கான போட்டியாக மாறிவிட்டது அதனால் தான் சென்னை அணியில் கரண் சிங் என்ற லெக் ஸ்பின்னர் இருந்தால் கூட இம்ரான் தாஹிர் என்ற ஸ்பின்னறும் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போன்று என்னை பொறுத்த வரை கிரிக்கெட் என்பதே பேட்ஸ்மேன்களுக்கான கேமாக தான் இருந்து வருகிறது.ஆனால் ஐ பி எல் தொடங்கிய நிலையில் அது பந்துவீச்சாளர்களுக்கான போட்டியாக மாறிவிட்டது .இதன் மூலம் டி20 போட்டிகள் பேட்ஸ்மன்கள் திறமையைவளர்த்துக்கொள்ள மட்டுமல்ல, பந்துவீச்சாளர்களும் தங்களை முன்னேற்றிக்கொள்ளக் கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.