24 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக களமிறங்கும் கபில்தேவ்.! எதற்கு தெரியுமா.?

Kapildev-Ramlal-Nikhanj

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் 1983 ஆம் இந்திய அணிக்காக முதல் உலக கோப்பையை பெற்று தந்தவர். கடந்த 1994 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற நிலையில் தற்போது 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.

kapil dhev

ஆச்சரியமாக இருக்கிறாரக? ஆனால், இம்முறை கபில் தேவ் இந்திய அணிக்காக கோல்ப் போட்டியில் விளையாட உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் இதுவரை இந்திய அணிக்காக 131 டெஸ்ட் மற்றும் 225 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளர். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் கோலப் போட்டிகளில் ஈடுபட்டு வந்தார் கபில் தேவ்.

கோல்ப் போட்டிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கி வந்த கபில் தேவ். கடந்த ஜூலை மாதம் நொய்டாவில் நடைபெற்ற ஆல்-இந்தியா சீனியர்ஸ் போட்டியில் அணைத்து சீனியர் போட்டிகளிலும் பங்கேற்ற கபில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து ஆசிய போட்டிக்கான இடத்தை பிடித்திருக்கிறார் கபில் தேவ்.

kapil Dev

இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் ஜப்பானில் உள்ள மியாசகி நிகரில் உள்ள டாம் வாட்ஸன் கோல்ப் கிளப்பில் வரும் ஆசிய பசிபிக் சீனியர்ஸ் கோல்ஃப் போட்டிக்கான இந்திய அணி சார்பாக விளையாட உள்ளார். இதுகுறித்து சமீபத்தில் கபில் தெரிவிக்கையில் ‘எனது நண்பர் ஒருவர் கோல்ப் விளையாட்டைக் கற்றுக் கொண்டேன். கோல்ப் விளையாட்டு கிரிக்கெட்டை போன்றது இல்லை,ஆனால், நாட்டிற்காக நான் மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.