எனக்கு நம்பிக்கை இல்லை. தோனி குறித்து தனது கருத்தை சூசகமாக சொன்ன – கபில் தேவ்

kapil3
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எந்தவித போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை. அதன் பின்னர் இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் தோனி பங்கேற்காததால் ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இதனால் தோனி இனிமேல் விளையாடுவது சந்தேகம் என்ற தகவலும் எழுந்துள்ளது.

Dhoni

- Advertisement -

தோனியின் எதிர்காலம் குறித்து அண்மையில் பேசிய இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில் : ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இது எல்லோருக்கும் தெரியும், அவருக்கும் தெரியும். தேர்வாளர்களுக்கும் தெரியும் என்று தோனியின் இடம் குறித்து சூசகமாக தனது கருத்தினை தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது கருத்தை முன்வைத்துள்ளார். அவர் தோனி குறித்து கூறுகையில் : தோனி நீண்டகாலமாக கிரிக்கெட் விளையாடாததால் அவரது மறுபிரவேசம் என்பது கடினமாக கடினமானதாக தெரிகிறது. எனவே அவர் தற்போது தேர்வாளர்களின் விருப்பத்திற்கு சற்று தள்ளி இருப்பார். அவரது தேர்வு என்பது எளிமையானது கிடையாது. இவ்வளவு காலமாக கிரிக்கெட் விளையாட வில்லை என்பதால் அணிக்கு அவர் திரும்ப முடியும் என்று நான் நினைக்கவில்லை.

dhoni

ஆனால் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பாக ஐபிஎல் போட்டி இருக்கிறது. அப்படி அவர் ஃபார்முக்கு திரும்பி வருவது முக்கியமானதாக இருக்கும். மேலும் நாட்டிற்கு எது சிறந்தது என்பதை தேர்வர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ஏனெனில் தோனி நாட்டிற்காக நிறைய செய்துள்ளார் மேலும் 6 – 7 மாதங்கள் விளையாடாததால் அனைவரின் மனதிலும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அது பலவித விவாதங்களை உருவாக்கியுள்ளது என்றும் கபில் தேவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement