- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவர் மட்டும் பழைய பார்முக்கு வந்தா 300 அடிப்பது உறுதி – கபில் தேவ் சப்போர்ட்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து அண்மையில் நிறைய விவாதங்கள் எழுந்து வருகிறது. விளையாட்டாக சதங்களை குவிக்கும் தன்மையுடைய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில போட்டிகளில் அரைசதம் கடந்தும் அதனை பெரிய ரன் குவிப்பாக மாற்ற முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அவரது பேட்டிங் பார்ம் பழையபடி இல்லை என்று பலரும் கூறி வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி ரன்களை குவிக்கும் போது அவருடைய கேப்டன்சி குறித்து யாரும் பேசவில்லை.

- Advertisement -

ஆனால் தற்போது அவர் சிறிதளவு சறுக்கல்களை சந்தித்து உள்ளதால் அவரது கேப்டன்சி அழுத்தம்தான் ரன் குவிக்க தடையாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள். விராட் கோலிக்கு அப்படி எந்த ஒரு அழுத்தமும் கிடையாது. அவர் மீண்டும் ஒரு செஞ்சுரி அடித்து விட்டால் போதும் நிச்சயம் பல சதங்களைஅவரால் விளாச முடியும்.

அதுமட்டுமின்றி அவரால் 300 ரன்களைக் கூட அடிக்க முடியும் என்று கபில்தேவ் கூறியுள்ளார். ஒரு வீரர் அவருடைய 28 முதல் 32 வயது வரை தான் மிகச் சிறப்பான பார்மில் இருப்பார்கள். அந்த வகையில் விராட் கோலி நிச்சயம் மீண்டும் ஒரு சதம் அடிப்பதன் மூலம் மிகச் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவார் என்றும் மிகப்பெரிய அளவில் ரன் குவிப்பார் என்றும் கபில்தேவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by