இந்திய அணியின் ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை சிறப்பாக பந்துவீசி அசத்தினர். ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான இவர்கள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்களில் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழி கொடுத்து வந்தனர்.

அவர்கள் இருவரும் இணைந்து உலககோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களால் உலக கோப்பை தொடரில் ஒன்றுமே செய்ய முடியவில்லை. மேலும் அதன் பின்னர் அவர்களது சொதப்பல் தொடரவே இருவரில் ஒருவரை மட்டும் போட்டிகளில் கோலி விளையாட வைத்து வருகிறார்.
ஆனால் கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து ஆடும் லெவனில் விளையாடுவதில்லை. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணி தயாராகி வரும் நிலையில் பேட்டிங் டெப்தை கருத்தில் கொண்டு பேட்டிங் தெரிந்த ஸ்பின்னர் களுக்கே அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்பதால் இவர்கள் இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது : ஜடேஜாவின் பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு என அபாரமாக செயல்பட்டு வருகிறார். அவர் அனைத்து வகையிலும் இந்திய அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர் அதனால் மற்றவர்களைவிட அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அவரால் எந்த நேரத்திலும் இந்திய அணிக்கு பேட்டிங்கில் வலு சேர்க்க முடியும். தேவையான நேரத்தில் அவர் அணிக்காக ஸ்கோர் செய்கிறார். எனவே குல்தீப் மற்றும் சாஹல் இருவரில் ஒருவரே ஜடேஜாவுடன் ஆடினால் அணிக்கு நல்லது என்று கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



