Yuvraj Singh : யுவராஜ் விடயத்தில் பி.சி.சி.ஐ இப்படி செய்து இருக்க கூடாது – கபில் தேவ்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கை

kapil3
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் சில தினங்களுக்கு முன் தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி அது எனது அதிர்ஷ்டம்.

Yuvraj

- Advertisement -

பல போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அதில் நிறைய போட்டிகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் மறக்க முடியாத போட்டிகள் யாவும் இருக்கின்றன. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பையின் இறுதி போட்டி என்னால் மறக்க முடியாத போட்டிகளாகும் என்றும் கூறினார்.

இந்நிலையில் யுவராஜின் இந்த திடீர் ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி கபில்தேவ் கூறியதாவது : இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடியவர் யுவராஜ் சிங். இவரை போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைப்பது அரிதான விடயம் ஆகும். நான் எப்போதும் இந்திய கிரிக்கெட் லெவன் அணியை தேர்ந்தெடுத்தாலும் அப்போது நிச்சயம் யுவராஜ் அதில் இடம் பிடிப்பார்.

yuvraj 2

அது எத்தனை முறை இருந்தாலும் சரி அந்த அளவிற்கு யுவராஜ் ஒரு மிகச்சிறந்த வீரர் அவருக்கு முறையான பிரியாவிடை போட்டியை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இவரது இந்த விடயத்தில் ஏமாற்றி விட்டதாகவே நான் கருதுகிறேன். பிரியாவிடை போட்டி அளித்து பெருமையாக வழியனுப்ப தகுதியான வீரர் யுவராஜ் சிங் என்று நான் கருதுகிறேன். இனிவரும் ஓய்வு காலத்தில் அவர் நன்றாக வாழ எனது வாழ்த்துக்கள் என்று கபில் தேவ் கூறினார்.

Advertisement