என்ன செலக்சன் இது. அற்புதமாக விளையாடிவரும் இவருக்கு ஏன் டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கவில்லை – கபில் தேவ் ஆவேசம்

Kapil-Dev

வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியை அடுத்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணி முக்கியமாக பேட்டிங்கில் விமர்சனத்தை அதிகமாக சந்தித்து வருகிறது. அதன்படி முதல் இன்னிங்சில் 165 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 191 ரன்கள் மட்டுமே இந்திய அணி அடித்ததால் இந்திய அணி குறித்து விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்தன.

rahane

அகர்வால் மற்றும் ரஹானே மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் போட்டி நான்கு நாட்கள் முடிந்தது முடிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இந்தப்போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது : சிறப்பான ஆட்டத்தை நியூசிலாந்து வீரர்கள் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஆட்டத்தை பாராட்டவேண்டும்.

3 ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என அவர்கள் வெற்றி பெற்று அற்புதம் செய்து வருகிறார்கள். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை ஆராய்ந்து பார்த்தால் அணியின் நிர்வாகத்தாலே இந்த தோல்வி ஏற்பட்டது எனக் கூறலாம். ஏனெனில் இந்திய அணியில் ஏன் இத்தனை மாற்றம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் கிட்டதட்ட ஒரு புதிய அணி விளையாடும் அளவிற்கு ஏகப்பட்ட மாற்றங்கள் அணியில் இருக்கின்றன.

pant

மேலும் ஒரு வீரருக்கு அவரது இடத்திற்கான பாதுகாப்பு இல்லை என்றால் அவரது முழு ஆட்டத்திறன் எவ்வாறு வெளியே வரும். அந்த சூழ்நிலையே அவரது ஆட்டத்தை பாதிக்கும் பேட்டிங்கில் தலைசிறந்த வீரர்கள் இருந்தும் இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களை கூட அடிக்க முடியவில்லை இது பேட்ஸ்மேன்களின் குறையைக் காட்டுகிறது. மேலும் தற்போது உள்ள அணியின் நிர்வாகம் குறிப்பிட்ட வீரர்களை நம்புகிறது. டெஸ்ட் போட்டியில் புஜாரா அதிகளவு நம்புகிறது.

- Advertisement -

Rahul

ஆனால் தற்போது டி20, ஒருநாள் போட்டிகள் என இரண்டு வகையிலும் ராகுல் சிறப்பான பார்மில் உள்ளார். மேலும் அவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் நிறைய விளையாடி இருப்பதால் அவருக்கு அணியில் நிச்சயம் இடம் கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் அவருக்கு இந்த தொடரில் இடம் இல்லை. இதில் எந்த அர்த்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு வீரர் சிறந்த பார்மில் இருக்கும்போது அவரை விளையாட வைப்பது அவசியம் என்று கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.