இந்திய கிரிக்கெட்டில் இந்த கலாச்சாரம் எப்போவும் கிடையாது. கோலியே கேப்டனா இருக்கட்டும் – கபில் தேவ் அதிரடி

Kapil-Dev
- Advertisement -

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் கிரிக்கெட்டின் மூன்று விதமான போட்டிகளுக்கும் இரண்டு கேப்டன்கள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இப்படி பயன்படுத்தி வெற்றியும் கண்டுவிட்டனர். இந்தியாவை பொருத்தவரை காலம் காலமாக கிரிக்கெட்டில் எத்தனை வடிவங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் ஒரே கேப்டன் தான் என்ற எழுத்தப்படாத விதி இருக்கிறது.

Kohli-2

- Advertisement -

ஒரு காலத்தில் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு அணிகளுக்கும் ஒரே கேப்டன் என இருந்தனர். தற்போது மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் மூன்றிற்கும் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். மேலும் இப்படி அனைத்து வேலைகளையும் அவர் செய்வதால் அவருக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும், இதன் காரணமாக இந்திய அணி பல போட்டிகளில் தோல்வி அடைய நேரிடுவதாகவும் விமர்சனங்கள் இருந்து வருகிறது.

இதன் காரணமாக டி20 போட்டிகளில் மட்டும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்ற பேச்சுக்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறுகையில்… நம்முடைய இந்திய வழக்கப்படி ஒரு இடத்திற்கு 2 தலைமை ஒத்துவராது. அதிலும் இந்திய வழக்கப்படி ஒரு அணிக்கு இரண்டு கேப்டன்கள் என்ற முறை நடைமுறைப்படுத்தமுடியாது.

Kohli-4

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் இரண்டு தலைவர்கள், இருக்க முடியாது அப்படி தான் இந்திய அணிக்கும் இரண்டு கேப்டன்கள் நியமிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். உண்மையை சொல்லப்போனால் ரோகித் சர்மாவிற்கு டி20 கேப்டனுமகான பொருப்பை வழங்கலாம். ஏனெனில், அவர் மிகச் சிறப்பாக ஆடி 20 அணியை வழிநடத்தி இருக்கிறார்.

Kohli-3

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் தற்போது வரை ஐந்து முறை அந்த அணிக்கு கோப்பை வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டி20 வடிவத்திற்கு ரோஹித்தை கேப்டனாக நியமிக்க தொடர்ந்து குரல்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement