முன்பு இருந்த மாதிரி இவர் இல்லை. என்ன பேட்டிங் ? இப்படி மோசமாவா விளையாடுறது – கபில் தேவ் காட்டம்

Kapil-Dev
- Advertisement -

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றிய போதிலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை இழந்தது. இந்த அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி பல மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

Rahane-1

- Advertisement -

மேலும் இந்த தொடரில் குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங் குறித்த விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்து வருகின்றன. இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடும் அனைவரும் வெளிநாட்டு மைதானங்களில் சிரமப்பட்டு வருகின்றனர் என்பது இந்த தொடரில் அப்பட்டமாக தெரிந்தது. இந்த தொடர் முழுவதும் விராட் கோலி ஆட்டம் மிக மோசமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரகானேவின் ஆட்டமும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது : ரஹானேவும், புஜாராவும் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆனால் ரஹானேவின் இந்த மோசமான ஆட்டம் என்னை மோசமாக பாதித்தது. அவரின் ஆட்டத்தைப் பார்க்கும் போது முன்பிருந்த ரகானே இப்போது இல்லை என்பது போன்ற கருத்து எனக்கு ஏற்பட்டுள்ளது என்று கபில்தேவ் கூறியிருந்தார்.

rahane

ஏற்கனவே இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் குறிப்பிடுகையில் ரஹானே கிரிக்கெட் விளையாட தெரியாதவர் போன்று விளையாடுகிறார் என்ற கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கபில் தேவின் இந்த கருத்தும் தற்போது சிக்கலை உண்டாக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement