இவரை அணியில் இருந்து நீக்க யாரும் காரணமில்லை. மீண்டும் பலமாக திரும்புவார் – கபில் தேவ் ஓபன் டாக்

Kapil-Dev
- Advertisement -

தோனிக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்று இந்திய நிர்வாகம் அவருக்கு நிறைய வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கியது. ஆனால் தொடர்ச்சியாக அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலுமே சொதப்பி வந்தார். எனவே பண்டினை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக சாம்சனக்கு வாய்ப்பு கொடுக்கும்படி குரல்கள் அதிகமாக எழுந்தன.

- Advertisement -

இந்நிலையில் மீண்டும் பண்டுக்கு தொடர்ந்து கொண்டிருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டே இருந்தன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் இந்திய அணியின் கீப்பராக செயல்பட்ட பண்ட் முதல் போட்டியில் காயமடைந்து வெளியேறியதால் இரண்டாவது இன்னிங்சில் ராகுல் கீப்பராக செயல்பட்டார். அப்போது கீப்பிங்கில் அசத்திய ராகுல் தொடர்ச்சியாக அடுத்த 2 போட்டிகளிலும் கீப்பிங் செய்யும் வாய்ப்பைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவரே விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். கடந்த சில போட்டிகளாக பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரை மாற்றாமல் அந்த இடத்தில் கோலி பரிசோதித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பண்ட் ஓரங்கட்டப்பட்டு விட்டார். ராகுல் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டுமே செய்வதால் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் அணியில் சேர்க்க நல்ல வாய்ப்பு கிடைப்பதால் அணிக்கு நல்ல பேலன்ஸ் கிடைக்கிறது.

Rahul

இந்நிலையில் பண்ட் இடம் குறித்து சென்னையில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது :ரிஷப் பண்ட் மிகவும் திறமையானவர் அவரது விவகாரத்தில் யாரையும் குறைகூற முடியாது. அவரை அவரேதான் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். சிறப்பாக பேட்டிங் செய்து தொடர்ச்சியாக ரன்களை அவர் குவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் தன்னை விமர்சிப்பவர்களை அவர் பதிலடி கொடுக்க வேண்டும். அவரது திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் தேர்வாளர்கள் அவரை ஒதுக்குவதற்கோ, பெஞ்சில் உட்கார வைப்பதற்கோ வாய்ப்பு வழங்கக்கூடாது. அவர் நன்றாக ஆடினால் மட்டுமே அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியும் என்று கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement