கபில் தேவின் பேட்டியால் இந்திய அணியிலிருந்து காணாமல் போகவுள்ள இளம்வீரர் – இதை நோட் பண்ணீங்களா ?

Kapildev

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் மீதும், அணியில் உள்ள வீரர்கள் மீதும் அதிக அளவு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது மிகப் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. மழைபெய்து ஒருநாள் போட்டி நடைபெறாமல் இருந்தும் கூட அணியை மாற்றாமல் விராத் கோலி களமிறக்கியது சர்ச்சையான விடயமாக மாறியுள்ளது.

IND

இதன் காரணமாக நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் உடனேயே இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே இறுதிப் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது ஒரு மிகப்பெரிய குறையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் சமீப காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு அவ்வப்போது விளையாட முடியாமல் தவித்து வருகிறார் .இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பண்டியாவின் உடற்தகுதி குறித்து பேட்டியளித்த கபில்தேவ் கூறுகையில் : எங்கள் காலத்தில் எல்லாம் வேகப்பந்து வீச்சாளர்கள் எத்தனை ஓவர்கள் தொடர்ச்சியாக பந்து வீசினாலும் அவ்வளவாக சோர்வடைவது இல்லை.

Pandya

ஆனால் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் 4 ஓவர்கள் வீசினாலே சோர்வாகி விடுகின்றனர் என்று வெளிப்படையாக பாண்டியா மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் என்றும் வீரர்கள் மீண்டு வந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் அவரை மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார். இது ஒருபுறமிருக்க பாண்டியா இலங்கை தொடரில் தான் பந்துவீச இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது உடல் தகுதி முழுமையாக இல்லாத காரணத்தினால் பந்துவீச இயலவில்லை என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

Pandya 1

ஆனால் தற்போது மீண்டும் முழு வேகத்தில் நான் பந்துவீச தயாராகி வருகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அடிக்கடி காயம் காரணமாக அவதிப்படும் பண்டியாவிற்கு பதிலாக ஷர்துல் தாகூர், விஜய் ஷங்கர் அல்லது சிவம் துபே ஆகியோரை தயார் செய்து ஆல்ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளராக விளையாட வைக்கலாம் என்று இந்திய நிர்வாகம் நினைப்பதால் நிச்சயம் பாண்டியாவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement