கோலி ஈஸியா லீவ் எடுத்துட்டாரு. ஆனா கவாஸ்கர் அப்படி பண்ணல – கோலியின் குழந்தை குறித்து பேசிய கபில்தேவ்

kapil3
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்றது. தற்போது இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த தொடர் குறித்த சுவாரசியமான விடயங்களை பல கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த தொடரின் முக்கிய விடயமாக பார்க்கப்படுவது யாதெனில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு இந்திய அணியின் கேப்டன் கோலி நாடு திரும்புகிறார்.

kohli

மேலும் மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கு ரோகித்சர்மா அணியில் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய குழந்தை பிறப்புக்காக நாடு திரும்பும் கோலி பிசிசிஐ அனுமதியை ஏற்கனவே பெற்றுவிட்டார். இந்நிலையில் விராட்கோலி எடுத்துக்கொண்ட இந்த விடுமுறை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளருடன் உரையாடினார்.

- Advertisement -

இந்த உரையாடலின் போது சில சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முன்பெல்லாம் நாங்கள் விளையாடும் போது இப்படி எல்லாம் நினைத்த உடன் எங்கும் சென்று வர முடியாது. சுனில் கவாஸ்கர் தன்னுடைய மகனை பார்க்க பல மாதங்கள் ஆனது. அது வேறு சூழல். இப்போதுள்ள நிலைமை மாறிவிட்டது. கோலியை எடுத்துக்கொண்டால் அவருடைய அப்பா இருந்து அடுத்த நாளே அவர் கிரிக்கெட் விளையாட வந்துவிட்டார்.

Anushka

இப்போது அவர் தன்னுடைய குழந்தை பிறப்புக்காக லீவு எடுக்கிறார். இது நல்லதுதான் இப்போதெல்லாம் அப்படி செய்ய முடிகிறது. ஆனால் முன்பு அப்படி கிடையாது இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சலுகைகள் வாரி வழங்கப் பட்டு வருகின்றன. வீரர்கள் ஒரு விமானத்தை வாங்கி தனது குடும்பத்தை பார்த்து விட்டு மீண்டும் மூன்று நாட்களில் திரும்பி வர முடியும்.

anushka

ஆனால் நாங்கள் விளையாடிய போது இது போன்ற வசதிகள் கிடையாது. கிரிக்கெட்டில் இத்தகைய வளர்ச்சியை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கோலிக்கு கிரிக்கெட்டில் உள்ள ஆர்வத்தை விட தற்போது குழந்தையை கையில் ஏந்தும் ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது என்பதை உணர்கிறேன். மேலும் அவர் இந்த முடிவை தான் மதிப்பதாகவும் கபில்தேவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement