இப்போ இருக்குற பாஸ்ட் பவுலர்ஸ் எல்லாம் ரொம்ப மோசம். நாங்க அப்படி இல்ல – கபில் தேவ் கருத்து

Kapil-Dev
- Advertisement -

நாங்கள் விளையாடிய கால கட்டத்தில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்களைப்போல, இந்த காலக்கட்டத்தில் இருக்கும் வேகப் பந்து வீச்சாளர்கள் செயல்படுவதில்லை என்று கருத்து கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ். ஐசிசி நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது இந்திய அணி. அணித் தேர்வுதான் இரு அணிகளிலும் இருந்த மிகப்பெரிய வித்தியாசம். ஆடுகளமானது வேகப் பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும் என்பதால், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான காலின் டி கிராந்தோம் உடன் சேர்த்து ஐந்து வேகப் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினார் கேன் வில்லியம்சன்.

Bumrah

- Advertisement -

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார். மற்றொரு வீரரான ஷர்துல் தாக்கூரையும் அணிக்குள் சேர்க்காமல் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினார் இந்திய அணியின் கேப்டனான கோஹ்லி. ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வேகப் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் போனதுதான் இந்திய அணியின் மிகப் பெரிய பலவீனமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இக்காலக்கட்டத்தில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர்களைப் பற்றி பேசியுள்ள கபில் தேவ் கூறியதாவது,

இப்போதுள்ள வீரர்கள் ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாடினாலே அதிக அளவில் காயங்களை சந்திக்கின்றனர். இது கிரிக்கெட்டில் எப்போதுமே நிகழும் ஒன்றுதான். பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் என இருவருக்குமே காயங்கள் ஏற்படும். எங்களுடைய கால கட்டத்தில் எங்களால் அனைத்தும் செய்ய முடிந்தது. நாங்கள் நினைத்ததை செய்தோம். ஆனால் இப்போதுள்ள வீரர்களால் அதுபோல் இருக்க முடியவில்லை. நான்கு ஓவர்கள் வீசினாலே அவர்கள் சோர்ந்து போய் விடுகிறார்கள். சில நேரங்களில் அவர்களால் மேற்கொண்டு பந்துவீச முடிந்தாலும் அவர்களை வீச விடாமல் தடுத்து விடுகின்றனர்.

bumrah 2

இவர்கள் இப்படி செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை. எங்களுடைய நாட்களில் ஒரு பேட்ஸ்மேனை விக்கெட் எடுக்க வேண்டுமானால் ஒரு பந்து வீச்சாளரை தொடர்ந்து பத்து ஓவர்கள் வீசகூட அனுமதித்துள்ளோம். அந்த அளவிற்கு அவர்களின் உடல் தகுதி இருக்கும். ஆனால் இப்போது நான்கு ஓவர்கள் வீசிவிட்டாலே போதுமானதாக இருக்கிறது. இதுதான் எங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் என்று அவர் கூறினார்.

Thakur

இந்திய அணியின் மற்றொரு வேகப் பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கிலும் சற்று சிறப்பாக செயல்படுவதால் அவரை இந்திய டெஸ்ட் அணியின் முழநேர ஆல்ரவுண்டராக மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்று இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான பரத் அருண் ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதன்படி எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வேகப் பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement