
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரும், சிறந்த ஆல்ரவுண்டர் என பெயரெடுத்தவருமான கபில்தேவ் இந்திய அணியை ஒரு கேப்டனாகவும் சிறப்பாக வழி நடத்தினார். இந்திய அணிக்காக முதல் முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் என்று பெயர் பெற்றவர் கபில்தேவ்.
1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பலம்வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து முதன்முறையாக இந்திய அணிக்கு உலகக்கோப்பையை கைப்பற்றி கொடுத்து வரலாற்று சாதனை படைத்தார். அந்த வெற்றிக்குப் பிறகு இந்தியாவில் பட்டி முதல் சிட்டி வரை கிரிக்கெட் புரட்சியே ஏற்பட்டது என்று கூறலாம்.
அந்த அளவிற்கு இந்திய அணியின் அந்த வெற்றி கொண்டாடப்பட்டது. கிரிக்கெட் ஜாம்பவானான கபில்தேவ் தற்போது தன்னோடு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் குறித்து சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி 1978-79 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்திய அணிக்காக விளையாட வந்த போது அப்போது சீனியர் வீரரான வெங்கட்ராமன் என்ற கேப்டனை பார்த்து பயந்து மிரண்டு ஓடி ஒளிந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : பிஷன் பேடி தலைமையிலான இந்திய அணி அணியில் அறிமுகமானவர் நான். சுனில் கவாஸ்கர் தலைமையில் நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளேன். ஆனால் வெங்கட்ராகவன் தலைமையில் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார் கபில்தேவ்.
வெங்கடராகவன் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த நாட்கள் எனக்கு கடினமான நாட்களாகவே நகர்ந்ததாக உணர்கிறேன். அவர் அம்பயராக செயல்பட்ட போதும் பவுலர்களிடம் கடிந்து கொள்வார். அதே போல கேப்டனாக இருந்த போதும் அவர் வீரர்களும் சற்று கடினமாகவே நடந்து கொள்வார். இதனால் அவரை பார்க்க எனக்கு சற்று பயமாக இருக்கும் என்று கபில் தேவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.