இப்படி இருப்பதும் நல்லாத்தான் இருக்கு. கொரோனா தீவிரத்தின் இடையில் கபில் தேவின் கிண்டலான பேச்சை பாருங்க – விவரம் இதோ

Kapil-Dev
- Advertisement -

உலகமே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் உலகம் முழுவதும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தினருடன் பொதுமக்கள் வெளியே செல்வதும் தவிர்க்கப்பட்டுள்ளது.

corona 1

- Advertisement -

இதனால் குடும்பத்துடன் நேரம் செலவிட இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : ஆம் வீட்டுக்குள்ளேயே தற்போது முடங்கிக் கிடக்கிறோம். ஆனால் சூழ்நிலையை தீவிரத்தை நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதலின் தீவிரத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அனைவரும் சற்று முன் எச்சரிக்கையுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்படி வீட்டுக்குள்ளேயே இருப்பதும் ஒரு புது அனுபவம்தான். மேலும் இதுதான் வீரர்களுக்கு காயத்திலிருந்து மீண்டு வர சரியான தருணம்.

kapildev

மேலும் வரும் போட்டிகளுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவும் ஓய்வு மிக அவசியம் எனவே நாம் தன்னம்பிக்கையுடன் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆண்டுக்கு 10 மாதங்கள் ஏதாவது ஒரு பணியை செய்து கொண்டே இருக்கிறோம் ஆகவே இதுபோன்ற ஓய்வு நிச்சயம் நமக்கு தேவை.

- Advertisement -

நாமும் மற்றவர்களுக்காக பொது இடங்களை தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படக்கூடாது. எனவே அரசின் அறிவுரையின்படி நாம் பணிந்து நடக்க வேண்டும். கூடிய விரைவில் இந்த வைரசுக்கான காண மருந்தினை கண்டுபிடிக்கும் வரை நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

corona

மேலும் நம்மால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனவே மக்கள் இந்த நாட்களில் தங்களது உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கபில்தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement