நீங்க எல்லாம் எதுக்கு ஐபிஎல் ஆடுறீங்க? இந்திய அணியின் சீனியர் வீரரை – சாடிய கபில்தேவ்

Kapil-Dev
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணியில் இல்லாத வீரர்கள் தயாராகி வருகின்றனர். தற்போது நியூசிலாந்து தொடரில் இந்திய அணி இந்தியாவிற்கு வந்த பின்னர் ஐபிஎல் தொடருக்கு தயாராக வெறும் பத்து நாட்களே இருக்கும். பத்து நாட்களுக்குள் இவ்வளவு பெரிய தொடருக்கு தயாராவது வீரர்களுக்கு மனதிலும் உடலிலும் சோர்வைத் தரும்.

ind-2

- Advertisement -

சென்ற வருடம் இது குறித்து கேப்டன் விராட்கோலி கூறியிருந்தார் . இந்திய அணி கிட்டத்தட்ட 360 நாட்களில் 300 நாட்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதிலேயே கழிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது..

Ind

ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் இந்தியாவிற்காக விளையாடவில்லை. கிரிக்கெட் ஆடி ஆடி சோர்ந்து விடுகிறார்கள் என்றால், ஐபிஎல் போட்டியை தவிர்த்துவிடுங்கள். இந்தியாவிற்காக எப்போதும் விளையாடவேண்டும். சோர்வடைந்தால் ஐபிஎல் போட்டியில் ஆட வேண்டாம் என விராட் கோலி மற்றும் மற்ற வீரர்களுக்கு காட்டமாக தெரிவித்துள்ளார் கபில் கபில் தேவ்.

Advertisement