விராட் கோலி தனது பழைய பார்மிற்கு திரும்ப இதனை செய்தால் போதும் – கபில்தேவ் அட்வைஸ்

Kapil-Dev
- Advertisement -

விராட்கோலி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சரியாக ஆடவில்லை சரியாக ஆடாததுமட்டுமில்லாமல் தேவையில்லாத பந்துகளில் தனது விக்கெட்டை இழந்தார். இன்ஸ்விங் பந்துகளிலும், வெளியே செல்லும் பந்தை உள்ளே விட்டு அவுட் ஆவது என வித்தியாசமாக தனது விக்கெட்டை இழந்தார்.

kohli 1

- Advertisement -

இது அவரது பலவீணத்தை வெளிப்படுத்தியதாக பலரும் பலவாறு கூறி வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி கபில்தேவ் அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : நீங்கள் 30 வயதை தாண்டும் போது உங்களுடைய கண்பார்வை திறன் சற்று குறையும். இன்-ஸ்விங் பந்தை கிளிக் செய்து பவுண்டரிக்கு விரட்டுவதுதான் விராட் கோலியின் பலம். ஆனால் அதே பந்தில் முறை ஆட்டம் இழந்துள்ளார்.

அவரது கண் பார்வைத் திறனை அவர் சற்று சரிசெய்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். விராட் கோலியை போன்ற மிகப் பெரிய வீரர்கள் போல்டு அல்லது லெக் பிபோர் விக்கெட் ஆகும் போது அவர்கள் அதிகமாக பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற விக்கெட்டுகள் உங்களுடைய பலத்தை பலவீனமாக மாற்றக்கூடும்.

Kohli

இதே போல் சேவாக், டிராவிட், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே விராட் கோலியும் மிக அதிக அளவில் பயிற்சி செய்து மீண்டு வர வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார் கபில் தேவ்.

Advertisement