தேர்வுக்குழுவில் இருந்து கபில்தேவ் திடீர் ராஜினாமா ? பறிபோக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவி – விவரம் இதோ

Kapil-Dev
- Advertisement -

இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரோடு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி ரவிசாஸ்திரிக்கு முடிவடைந்தது. இதனை அடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வு எடுக்கும் ஒரு பெரிய பொறுப்பை பிசிசிஐ கபில்தேவ் தலைமையிலான கமிட்டியிடம் ஒப்படைத்தது.

kapildev

- Advertisement -

அந்த புதிய கமிட்டியால் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்ந்தெடுத்து 2021 ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இரட்டை ஆதாயம் தரும் பதவி வகிப்பதாக கமிட்டியின் மீது இருந்த நபர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கமிட்டியில் ஏற்கனவே ஒருவர் ராஜினாமா செய்ய தற்போது கமிட்டியின் தலைவரான கபில்தேவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் குறிப்பிட்டதாவது : இந்திய பயிற்சியாளர் தேர்வு குறித்த கமிட்டியில் நான் பணிபுரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி மேலும் என்னை நம்பி அந்த பொறுப்பை ஒப்படைத்து அவர்களுக்கு நான் எனது முறையான செயல்பாட்டை கொடுத்துவிட்டேன். மேலும் தற்போது எனக்கு அதில் இருந்து ராஜினாமா பெற விருப்பம் ஏற்பட்டதால் உடனடி ராஜினாமாவை செய்துள்ளேன் என்று கபிலதேவ் தெரிவித்துள்ளார்.

Ravi

இதனால் ரவிசாஸ்திரி பதவி தற்போது பறிபோகும் நிலையில் உள்ளது. ஏனெனில் புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டால் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். மேலும் புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுக்க மற்றொரு கமிட்டி அமைக்கப்படும் அப்படி அமைந்தாலும் ரவி சாஸ்திரியே மீண்டும் பயிற்சியாளராக தேர்வு என்று பலராலும் கூறப்படுவதால் மீண்டும் பயிற்சியாளர் தேர்வு வந்தாலும் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் தொடர்வார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement