இவரைப்பத்தி சொல்லுவது ஈஸி தான். ஆனால் அப்படி இருக்குறது ரொம்ப கஷ்ட்டம் – கபில் தேவ் பெருமிதம்

Kapil-Dev
- Advertisement -

கிரிக்கெட் உலகின் சாதனை மன்னனும், இந்திய அணியின் ஜாம்பவான் ஆன சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் படைக்காத சாதனையே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு சாதனைகள் அடுக்கடுக்காக சாதனைகளை தன்வசம் வைத்துள்ள சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் அதேபோல டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்றால் அது சச்சின் தான்.

sachin

- Advertisement -

அதுமட்டுமின்றி யாரும் முறியடிக்க முடியாத சாதனை என்று கருதப்படும் சாதனையான சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த சாதனை என இதுபோன்ற இமாலய சாதனைகளை வைத்திருக்கும் சச்சின் ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் சச்சின் குறித்து ரேடியோ சிட்டியில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் சச்சினுக்கு இன்னும் திறமை உள்ளதால் இதை விட மேலும் பல சாதனைகளை படைத்து இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த கருத்துக் குறித்து விரிவாகப் பேசிய அவர் : எனது இந்தக் கருத்தை பலர் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு கிடைத்ததில் சச்சின் டெண்டுல்கரே மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்.

sachin

அவரது சாதனைகளை கணக்கிடும் போது அவர் இன்னும் அதிகமான சாதனைகளை படைத்து இருக்க வாய்ப்பு இருந்துள்ளது. இந்தியாவிற்காக அவர் செய்ததை விட வேறு யாரும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது. அவரின் இந்த 24 ஆண்டுகள் கிரிக்கெட் கெரியர் என்பது சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் அது செயல் ரீதியில் மிகவும் கடினமான ஒன்று.

- Advertisement -

அவர் எல்லா வகையிலும் எல்லா வளங்களையும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்திய நாட்டிற்காக 24 ஆண்டுகள் அளித்த மகிழ்ச்சி தற்போது அவர் குடும்பத்திற்கும் அவருக்கும் இனிவரும் காலங்களில் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகிறேன்.

sachin

அவரது குடும்பம் தான் அனைத்தையும் விட அதிகமாக தியாகம் செய்துள்ளது. அவர் ஆரோக்கியமாக இருக்கவும் நான் வாழ்த்துகிறேன். சுமார் 25 ஆண்டுகளில் சச்சின் பல தலைமுறை வீரர்களை கடந்துள்ளார். பல இளம் வீரர்களை அவர் பார்த்துள்ளார் மேலும் அவரைப் பார்த்து வீரர்கள் அவரைப் போன்றே செயல்பட வேண்டும் என்ற எண்ணமும் கொண்டுள்ளனர். இவரை முன் மாதிரியாக வைத்து கிரிக்கெட்டிற்கு வரும் வீரர்கள் அதிக அளவில் உள்ளனர்.

இவரது புகழ் கிரிக்கெட் இருக்கும் வரை அழியக்கூடாது. இந்திய கிரிக்கெட் அணிக்காக இவர் ஆற்றிய பங்கு மிகவும் அதிகம் என்று கபில் தேவ் பெருமையாக கூறியது குறிப்பிடத்தக்கது. சச்சின் இதுவரை இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 51 சதங்கள் மற்றும் 68 அரைசதங்கள் என 15 ஆயிரத்து 921 கண்களையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 463 போட்டிகளில் பங்கேற்று 49 சதம் மற்றும் 96 ரன்களை விளாசி 18426 எங்களையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement