கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்களால்தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது – கபில்தேவ் புகழாரம்

kapil3

முன்பெல்லாம் இந்திய அணி சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்ட அணியாகவும், அவர்களாலே இந்திய அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் தற்போது உள்ள இந்திய அணி பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் தனது ஆதிக்கத்தை அதிக அளவு வெளிக்காட்டி வருகிறது.

Shami

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்திய அணி இதுவரை இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த வேகப்பந்து யூனிட்டை தற்போது கொண்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் நான் சொல்லித்தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பானது என்று தெரிய வேண்டியது இல்லை.

இதுபோன்ற வேகப்பந்து அட்டாக்கை இதுவரை பார்த்தது கிடையாது கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளுக்கான வெற்றிகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவு தங்களது பங்கு அளித்துள்ளனர் என்பதில் கொஞ்சம் கூட எனக்கு சந்தேகம் கிடையாது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

IND

ஷமி, புவனேஸ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் என அனைவரும் வேகப்பந்து வீச்சில் மிரட்டுகின்றனர் என்று கபில் தேவ் கூறினார். முன்பெல்லாம் பேட்ஸ்மேன்களை வைத்து வெற்றி கண்ட நாம் இப்போது பந்துவீச்சாளர்களை வைத்து வெற்றி கண்டு கொண்டிருக்கிறோம் என்பது கபில் தேவ் சொல்வதுபோல் உண்மைதான்.