அப்படி பார்த்த கங்குலி,சச்சின் மாதிரியானா வீரர்கள் கிடைத்திருப்பார்களா..? கடும் கோபத்தில் கபில் தேவ்..! – காரணம் இதுதான்..?

kapil3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு அவர்களது உடல் தகுதியை உறுதி படுத்த ‘யோ யோ’ எனப்படும் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்திய வீரகள் சிலர் இந்த டெஸ்டினால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தும் விளையாட முடியாத சூழலால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யோ யோ டெஸ்ட் தொடர்பான அதிருப்தியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வெளிப்படுத்தியுள்ளார்.
kapildev

கிரிக்கெட்டில் பிட்னெஸ் என்பது சில ஆண்டுகளாக தான் பின்பற்றி வரப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் உலகில் பிட்னெஸ் என்பது அதிகம் கவனிக்கப்பட்டதாக ஒரு விடயமாக தான் இருந்தது. ஆனால், தற்போது ‘யோ யோ’ பயிற்சி வந்த பிறகு அனைத்து கிரிக்கெட் வீரர்களுமே தங்களது பிட்னெஸ் குறித்து அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் இந்த யோ யோ டெஸ்ட்டிற்கான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றது. சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை இந்த ஒரு டெஸ்ட் மூலம் எப்படி மதிப்பிட முடியும் என்று பல்வேறு நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் குறித்த தனது கருத்தினை முன்னாள் இந்திய அணியின் கபில் தேவ் தெரிவித்த விடயம் என்னவெனில் ‘கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் ஆடுவதற்கு தேவையான உடற்தகுதி இருந்தால் போதும். அதைத்தவிர வேறு தகுதி தேவையில்லை.
kapil-dev

ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட பயிற்சிகளுடன் அவரவருக்கு தேவையான உடற்தகுதியுடன் பெற்று இருப்பார்கள். ஓடுவது மட்டுமே உடற்தகுதியாக கருதிவிட முடியாது.அதே போல யோ யோ டெஸ்ட்டை வைத்து வீரர்களை மதிப்பிட முடியாது .ஓடும் பயிற்சி அதிகமாக எடுப்பதால் பேட்ஸ்மேன்களை காட்டிலும் பவுலர்கள் எளிதாக யோ யோ டெஸ்ட்டில் தேறிவிடுவார்கள். அப்படி பார்த்தல் இந்திய அணியில் உள்ள கங்குலி, லக்‌ஷ்மண், கும்ப்ளே ஆகியோர் கூட இதுபோன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் போகலாம். அதற்காக அவர்கள் சிறந்த வீரர்கள் இல்லை ஆகிவிடுவார்களா என்ன’ என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

Advertisement