மாரடைப்பால் மருத்துவமனையில் இருக்கும் கபில் தேவிற்கு என்ன சிகிச்சை கொடுக்கப்படுகிறது தெரியுமா ? – விவரம் இதோ

Kapil-dev-2
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலக கோப்பையை இந்திய அணிக்காக முதல் முறையாக வென்று கொடுத்தவருமான கபில்தேவ் டெல்லி மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப் பட்டார் என்ற செய்தி இன்று மதியம் வெளியானது. இந்த செய்தியை ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

kapil-dev

61 வயதான கபில்தேவ் இந்திய அணிக்காக 1978 ஆம் ஆண்டு அறிமுகமாகி 1994ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். மொத்தமாக 131 டெஸ்ட் போட்டிகளிலும் 225 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 1983 ஆம் ஆண்டு இவரது தலைமையில் இந்திய அணி பலம்வாய்ந்த மே.இ தீவுகளை வீழ்த்தி உலககோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர் இந்திய அணியின் சிறப்பான ஆல்ரவுண்டர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர் கபில் தேவ். இந்நிலையில் 61 வயதாகும் அவருக்கு இன்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது இதன் காரணமாக அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி நாம் அறிந்ததே.

kapil dev

இந்த விடயம் நாடு முழுவதும் காட்டு தீ போல பரவ இந்தியா முழுவதும் இருந்து ரசிகர்கள் அவருக்கு நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

kapil dev 1

மேலும் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை ஒன்றும் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அவர் உடல்நலம் முன்னேறி நார்மலாக உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement