ஆஸ்திரேலிய வீரர்களை விக்கெட் எடுக்கணுனா பவுன்சர் வேணாம் – இந்திய பவுலர்களுக்கு அட்வைஸ் கொடுத்த கபிலதேவ்

Kapil-dev-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் துவங்குகிறது. பகலிரவு போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த நிலையில் இரு அணி வீரர்களும் இப் போட்டியில் விளையாட தயாராக இருக்கின்றனர். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. இம்முறையும் தொடரை கைப்பற்ற மும்முரம் காட்டும் அதே போன்று இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணியும் பலமாக நாளை சண்டையிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இந்த தொடர் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய மண்ணிற்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாதவர்கள். இந்த தொடரில் பவுன்சர் பந்துகளை அதிக அளவு பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க இரு அணி வீரர்களும் முயற்சிப்பார்கள்.

ஆனால் அவர்கள் பவுன்சர் பந்துகளை அதிக நேரம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை தங்களுடைய இயல்பான பந்துவீச்சின் மூலம் விரைந்து விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பவுலர்கள் முயற்சிக்க வேண்டும். அப்படி பந்துவீச்சை வெளிப்படுத்தினாலே விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழும். அதனால் பவுன்சர் பந்துகளை அதிகளவு பயன்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஷமி ஆகிய உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

மூன்றாவது பந்து வீச்சாளராக பார்க்கப்பட்ட இசாந்த் சர்மாவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ், சைனி, சிராஜ் ஆகிய மூவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் அவ்வளவாக விளையாடாதவர்கள் அந்த மைதானங்களில் பவுன்சர் பந்துகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் தொடர்ந்து பவுன்சர் பந்துகளை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசினால் அவர்களை அச்சுறுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

- Advertisement -

ஆனால் இதை அதிகமாக பயன்படுத்தாமல் இயல்பான பந்துவீச்சை வெளிப்படுத்துமாறு கபில்தேவ் இந்திய பவுலர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். நமது அணியின் வேகப்பந்து வீச்சாளர் இடம் குறைகள் ஏதும் இல்லை. இருப்பினும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சொந்த மைதானம் என்பதால் அவர்களுக்கு எவ்வாறு பந்து வீச வேண்டும் என்று நன்றாகத் தெரிந்திருக்கும். இதனால் நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பகலிரவு போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Ind-1

ஏனெனில் இந்தியாவில் நடைபெற்ற ஒரே போட்டியில் மட்டுமே இந்திய அணி பகலிரவு போட்டியில் கலந்து கொண்டுள்ளது. எனவே இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் நமக்கு 80 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு இருக்கும். தற்போது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டி நடை பெறுவதால் அந்த அனுபவம் அவர்களுக்கு கை கொடுக்கும் என்றும் கபில்தேவ் கூறியுள்ளார். இந்த போட்டி குறித்த உங்களது கருத்துக்களை ஏதேனும் இருப்பின் அதனை பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement