இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் இவர்தான். முடிவு செய்து தனது விருப்பத்தை தெரிவித்த – கபில் தேவ்

kapil3
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Ravi-Shastri

- Advertisement -

கடந்த ஜூலை 30 ஆம் தேதி வரை இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களை கபில்தேவ் தலைமையிலான தேர்வு குழு பரிசீலித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய பயிற்சியாளர் குறித்து கபில் தேவ் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வரவேற்கப்பட்ட விண்ணப்பங்களில் இறுதியாக தற்போது நாங்கள் ஷார்ட் லிஸ்ட் செய்துள்ளோம். அதன்படி 6 பேர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் வெற்றி விழுக்காடு அதிகமாக இருப்பதன் காரணமாகவும் மேலும் இந்திய அணியின் செயல்பாடு இவரது பயிற்சியின் கீழ் சிறப்பாக உள்ளது என்று நான் கருதுகிறேன்.

Ravi

இதனால் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர நான் சக உறுப்பினர்களோடு ஆலோசனை செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அவரை பயிற்சியாளராக பரிந்துரை செய்கிறேன். மேலும் கோலிக்கும் அவருக்கும் இடையேயான உறவு இந்திய அணியை பலப்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன். இதனால் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர நான் பரிந்துரை செய்கிறேன் என்று கபில் தேவ் கூறினார்.

Advertisement