உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : கபில்தேவ் கூறிய அதே கருத்தை கூறிய ரவிசாஸ்திரி – விவரம் இதோ

Kapil-Dev
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் மோத இருக்கின்றன. டெஸ்ட் கிரிக்கெட் வராலாற்றிலேயே முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதால், இந்த இறுதிப் போட்டியானது அனைவரின் மத்தியிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று தங்களது ஆருடத்தையும், தங்களுக்கு விருப்பமான அணிக்கு நிறைய ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர் பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள்.

INDvsNZ

- Advertisement -

இவர்களின் வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ்வும் தற்போது இணைந்துள்ளார். இந்த இறுதிப் போட்டி குறித்து பேசிய அவர், ஒரே ஒரு இறுதி போட்டி மட்டும் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், மூன்று இறுதிப் போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று அவர் கருத்து கூறியிருக்கிறார். மேலும் கூறிய அவர், இவ்வளவு பெரிய தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்க ஒரே ஒரு போட்டி மட்டுமே போதாது, என்னைக் கேட்டால் நிச்சயமாக மூன்று இறுதிப் போட்டிகள் இருந்திருக்க வேண்டுமென்று தான் நான் கூறுவேன்.

டெஸ்ட் போட்டிகளை அதிக மக்களிடம் கொண்டு செல்ல ஐசிசி எடுத்த இந்த முடிவு வரேவற்கத்த்தக்கது என்று கூறிய அவர் போட்டி நடைபெறும் மைதானத்தை பற்றியும் கூறியிருக்கிறார். அதைப் பற்றி அவர் கூறியதாவது, இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் மைதானமான ரோஸ் பவுல் மைதானத்தை விட லார்ட்ஸ் மைதானமே சிறந்ததாக இருக்கும். பழமையான லார்ட்ஸ் மைதானத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க போட்டிகள் நடைபெற்று இருக்கின்றன.

INDvsNZ

ஓல்ட் ட்ரஃபோர்டு மைதானமும் சிறந்த இடம்தான். ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியைக் கொண்டாடுவது தான் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்னதாக இன்று இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கபில்தேவ் கூறியது போலவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பின் இறுதிப்போட்டி ஒரு போட்டியாக இல்லாமல் 3 போட்டியாக இருந்திருக்க வேண்டும் என்று ஒரு கருத்தினை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

IND

கபில் தேவ் மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய இருவரும் இப்படி கூறுவதற்கு காரணம் யாதெனில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக ஒரு மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் சாம்பியன்ஷிப் கோப்பைக்காக விளையாடி இறுதியில் ஒரே போட்டியில் வைத்து சாம்பியன் யார் என்பதனை முடிவு செய்வது ஒரு தவறான முடிவு என்றும் அதற்காக இந்த இரு அணிகளுக்கும் 3 போட்டிகள் கொண்ட இறுதிப்போட்டி இருந்திருக்கலாம் என்பதே இவர்கள் இருவரது கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement