தோனி “கேப்டன் கூல்” என்று புகழ்பெற இதுவே காரணம் – லைவ் சேட்டில் தோனியை புகழ்ந்த கேன் வில்லியம்சன்

Williamson
- Advertisement -

இந்தியாவின் கேப்டன் கூல் எப்படி தோனியோ, அதேபோல் நியூசிலாந்து கேப்டன் கூல் கேன் வில்லியம்சன். அந்த அளவிற்கு மைதானத்தில் இருவரும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் ஆடுகளத்தில் என்ன தேவையோ அதை மட்டும் செய்வார்கள். இதனால் தோனியை போன்றே இவருக்கும் அந்நாட்டில் மட்டுமின்றி உலகளவிலும் ரசிகர் பட்டாளம் அதிகம் என்றால் அது மிகையல்ல.

Williamson

- Advertisement -

விராட் கோலியோ அல்லது ஸ்டீவன் ஸ்மித்தோ ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது போல் இவர்கள் இருவரும் செய்ய மாட்டார்கள். இப்படி இருக்க கேன் வில்லியம்சன் தற்போது தனக்கு பிடித்த கேப்டன் தோனியை பற்றி பேசியுள்ளார். ஸ்டார்ஸ்போர்ட்ஸ் செய்தி சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில்…

தோனி மிகவும் சிறப்பான மனிதர். எந்த ஒரு கவனத்தை சிதறடிக்கும் வேலைகளையும் செய்ய மாட்டார். அதில் சிக்கிக் கொள்ளமாட்டார். எது முக்கியமோ அதை மட்டுமே நினைத்துக் கொண்டும் செய்து கொண்டும் இருப்பார். போட்டியின் நிலைமை குறித்து மட்டுமே தீவிர கவனத்தைச் செலுத்துவார். இதுபோன்ற திறமையே அவரை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது. அந்த அளவிற்கு தனிச்சிறப்பான மனிதர் அவர் என்று கூறியுள்ளார் கேன்.

dhoni

மேலும் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறுகையில்… முதன்முதலாக தோனியுடன் 2004 ஆம் ஆண்டு விளையாடினேன். அவருடன் எங்கு சென்றாலும் நானும் செல்வேன். பழகுவதற்கு மிகவும் எளிதான மனிதர். கோபத்தை அவ்வளவாக வெளிப்படுத்த மாட்டார். அமைதியானவர்.

MSdhoni

15 வருடங்களுக்கு முன்னர் நான் பர்த்த தோனிக்கும் தற்போது பார்க்கும் தோனிக்கும் வெள்ளை முடி மட்டுமே வித்தியாசம். மனதளவில் அப்போது இருந்தது போல் தற்போதும் மிகவும் சாந்தமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

Advertisement