வார்னர்க்கு வக்காளத்து வாங்கும் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் – புது சர்ச்சை கிளம்பியது !

warner
- Advertisement -

ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கேன் வில்லியம்சன் பந்தை சேதப்படுத்திய வார்னருக்கு சப்போர்ட் செய்து பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் அம்பலமானது.

smith

- Advertisement -

முதலில் மறுத்த அவர் பின்னர் சகவீரர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த சம்பவம் நடந்தது எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.இதன் பின்னர் செய்த தவறை ஒப்புக்கொண்டு கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும் வார்னரும் பதவி விலகினர்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர் ஐசிசி ஆஸ்திரேலிய அணி கேப்டனிற்கு 100% அபராதத்தையும் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தது.பந்தை சேதப்படுத்திய பந்துவீச்சாளரான கேமரூன் பேன்கிராப்ட்க்கு 75% அபராதம் மட்டும் விதித்தது. இந்த பிரச்சனையை மிகவும் சீரியஸாக கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் விளையாட ஒரு வருட தடை விதித்தது.

Kane

ஆஸ்திரேலிய நிர்வாகம் தடை விதித்த பின் பேசிய ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா
“பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ள ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இந்த ஐபிஎல்-இல் பங்கேற்க முடியாது. எனவே அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் விளையாடுவார்கள்” என்று கூறியிருந்தார்.

அதன்படி டேவிட் வார்னரை ஹைதராபாத் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டன் கேன் வில்லியம்சன் வார்னரை பற்றி பேசிடும் போது “பந்தை சேதப்படுத்தியது தவறு தான். ஆனால் எனக்கு தெரிந்த வரையிலும் வார்னர் அதுபோன்ற வீரர் கிடையாது. ஏதோ எதிர்பாராத விதமாக நடந்த நிகழ்வு அது. யார் செய்தாலும் தவறு தவறு தான். தற்போது அதற்கான தண்டனையை அவர் பெற்றுவருகின்றார்” என்று பேசியுள்ளார்.

Advertisement