ஐ.பி.எல் ல அருமையா ஆடுறாரு. இந்திய அணின்னு வந்துட்டா படுமோசம் – கம்ரான் அக்மல் விமர்சனம்

Kamran
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் அன்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரை இந்திய அணியும், டி20 தொடரை இலங்கை அணியும் கைப்பற்றின. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் ஷிகார் தாவன் தலைமையிலான இந்திய அணி இலங்கை சென்று இருந்தது.

INDvsSL

இந்த தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்து. அவர்களும் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வகையில் சூர்யகுமார் யாதவ், ப்ரித்வி ஷா, வருண் சக்கரவர்த்தி, சேத்தன் சக்காரியா, இஷான் கிஷன் ஆகிய பலரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இனிவரும் தொடர்களிலும் இந்திய அணிக்காக வாய்ப்பை பெறும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் படுமோசமாக பேட்டிங்கில் சொதப்பிய சில வீரர்களை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் விமர்சித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Samson 1

சஞ்சு சாம்சன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருக்கும் அவர் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் இந்திய அணி என்று வந்து விட்டால் அவரது ஆட்டம் மோசமாக உள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடுவது போன்று பெரிய பெரிய ஷாட்டுகளை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அடிப்பதில்லை. கிடைக்கும் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்துவது இல்லை என அக்மல் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மூன்று சதங்கள் அடித்துள்ள சஞ்சு சம்சன் உள்ளூர் கிரிக்கெட்டில் விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதமடித்து நல்ல பார்மில் இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களிடையேயும் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement