கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்

Akmal
- Advertisement -

இந்திய அணியில் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக தற்போது உருவெடுத்து நிற்கின்றனர். கோலி மூன்று விதமான சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அசதி வருவது மட்டுமின்றி 70 சதங்களை விளாசியுள்ளார். அதேபோன்று ரோகித் சர்மா அனைத்து பார்மெட்டிலும் சதமடித்தது மட்டுமின்றி தொடர்ந்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Kohli

- Advertisement -

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆன கம்ரான் அக்மல் கோலி மற்றும் ரோஹித் ஆகியோரது வளர்ச்சி குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் : 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்கு பின்னர் சச்சின் டெண்டுல்கர், வி வி எஸ் லட்சுமணன், சேவாக், ராகுல் டிராவிட் ஆகியோரை இந்திய அணி தூக்கி எறிந்து விட வில்லை.

இந்த மிகப் பெரிய ஜாம்பவான்கள் தங்களால் முயன்ற அவரை அணியில் விளையாடி அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கினார்கள். அந்த சீனியர் வீரர்களின் வழிகாட்டுதலின் படியே கோலி ரோஹித் ஆகியோர் இன்று வளர்ந்து நிற்கின்றனர். மேலும் அதே போன்று தற்போது வளர்ந்து வரும் கே எல் ராகுல் தற்போதுள்ள சீனியர் வீரர்களின் வழிகாட்டுதலால் உயர்ந்துள்ளார் என சொல்லலாம்.

Laxman

இதே போன்று இந்திய வீரர்கள் அடைந்திருக்கும் உயரத்திற்கு காரணம் சீனியர் வீரர்கள் அவர்களுக்கு மீதும் காட்டு வழி காட்டுதலும், ஆதரவுதான், பாகிஸ்தானில் இதுபோன்ற செயல்முறை மிகவும் தாமதமாகவே வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . மேலும் தொடர்ந்து பேசிய கம்ரான் அக்மல் கூறுகையில் :

Kohli

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களுக்கு போதிய அங்கீகாரமும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை அப்படி கொடுக்கப்பட்டால் மிகச் சிறந்த வீரர்கள் பாகிஸ்தான் அணியிலும் உருவாவார்கள். மேலும் முன்னாள் வீரர்களான அப்துல் ரசாக் மற்றும் அக்தர் ஆகியோர் இளம் வீரர்களை உருவாக்கும் முயற்சியில் தற்போது இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement