இந்தியாவில் இருக்கும் இந்த வீரர்களை அனுப்பினால் கூட அவங்க ஈஸியா இலங்கையை ஜெயிச்சிடுவாங்க – கம்ரான் அக்மல் புகழாரம்

Kamran

இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ப இருப்பதால் நான்கு மாதங்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இதற்கிடையில் ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இளம் வீரர்களை வைத்து இரண்டாவது அணியாக இலங்கைக்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

IND

இதன் காரணமாக ஷிகார் தவான் தலைமையில் புவனேஸ்வர் குமார், ஹர்டிக் பண்டியா, யுஸ்வேந்திர சாஹல் போன்ற ஒரு சில சீனியர் வீரர்கள் இரண்டாவது அணியை பிசிசிஐ இலங்கைக்கு அனுப்புகிறது. இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆன கம்ரான் அக்மல் தற்போது இந்திய அணி எதிர்கொள்ள உள்ள இந்த இலங்கை தொடருக்கான தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி அடிப்படையிலிருந்து வலுவாக உள்ளது. தற்போது உள்ள இந்திய அணி இங்கிலாந்து சென்றாலும் மூன்றாவது கட்ட சி அணியை இலங்கைக்கு அனுப்பினால் கூட இந்திய அணியால் வெற்றி பெற முடியும்.

ஏனெனில் இந்திய அணி அடிப்படைக் கட்டமைப்பில் அவ்வளவு பலமாக உள்ளது. ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக இளம் வீரர்களை உருவாக்குவதில் சிறப்பான பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர்களை உருவாக்கி இந்திய அணிக்கு அனுப்பும் பொழுது ரவி சாஸ்திரி அவர்களை மேலும் மெருகேற்றி சிறந்த வீரர்களாக மாற்றி வருகிறார்.

- Advertisement -

Dravid

விராட் கோலி இந்திய அணியை சிறப்பாக வழி நடத்துவதால் இந்திய அணி தற்போது பலமாக உள்ளது. ஒருவேளை கோலி கேப்டனாக இல்லாமல் ஓய்வு எடுத்துக் கொண்டாலும் இந்திய அணியில் நிறைய வீரர்கள் கேப்டனாக விளையாட தகுதி ஆக இருக்கிறார்கள் என்று இந்திய அணியை புகழ்ந்து கம்ரான் அக்மல் புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement