டெஸ்ட் போட்டியில் சேசிங் பண்ணனும்னா இந்திய வீரரான இவரே கில்லாடி – கம்ரான் அக்மல் புகழாரம்

Kamran
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அடித்த முதல் ரன்கள் ஆகவே சிக்சருடன் அமர்க்களமாக டெஸ்ட் கிரிக்கெட்டை துவங்கிய ரிஷப் பண்ட் அந்தத் தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சதமடித்தும் அசத்தியிருந்தார். அதன் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ரிஷப் பண்ட் இடையில் பார்ம் அவுட் காரணமாக மோசமான வீழ்ச்சியை சந்தித்தார். அதன் காரணமாக அணியில் இருந்தும் சிறிது காலம் நீக்கப்பட்டார்.

Pant

- Advertisement -

ஆனால் அதன்பிறகு ஆஸ்திரேலிய தொடரின் போது மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட ரிஷப் பண்ட் அந்த தொடரில் ஆஸ்திரேலிய பவுலர்களை தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் பந்தாடினார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியின் போது மிக சிறப்பாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அது முதல் இந்திய அணியில் நிரந்தர வீரராக மாறியுள்ள ரிஷப் பண்ட் அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணியில் முதன்மை வீரராக விளையாடி வரும் ரிஷப் பண்ட் இந்த முதலாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் கூட வேகமாக விளையாடி 25 ரன்கள் குவித்து இருந்தார். இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் இந்த சிறப்பான செயல்பாடு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் தனது பாராட்டுகளை வழங்கியுள்ளார்.

Pant

இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் மிகவும் அருமையாக விக்கெட் கீப்பிங் செய்தார். நாளுக்கு நாள் அவருடைய கீப்பிங் திறமை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேபோன்று பேட்டிங்கிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் விரைவாக 25 ரன்கள் குவிப்பது எல்லாம் அசாத்தியமான ஒரு திறன்.

Pant

என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் தனது அதிரடியின் மூலம் அணியை ரிஷப் பண்ட் நிச்சயம் வெற்றிக்கு அழைத்துச்செல்வார். நான்காவது இன்னிங்சில் சேசிங் என்று வந்துவிட்டால் இந்திய அணியின் வெற்றிக்கு பண்ட் கை கொடுப்பார் என கம்ரான் அக்மல் அவரை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement