
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் மோசின் மக்கள்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆனால் அவருடைய கையில் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணி தெரிவித்து விட்டது.
அதனால் அங்கிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறிய நக்வி இந்தியா எப்படி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்க்க ஆசியக் கோப்பையையும் கையோடு எடுத்துச் சென்றார். மறுபுறம் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் வேறு யாரிடமாவது கொடுத்து கோப்பையை கொடுப்பார் என்று இந்திய அணியினர் மைதானத்தில் காத்திருந்தனர். இறுதியில் இந்தியா வாங்க மறுத்ததால் கோப்பை வழங்கப்படவில்லை என்று ஆசிய கவுன்சில் சார்பாக அறிவிக்கப்பட்டது.
அதற்காக வருந்தாத இந்திய அணியினர் கையில் கோப்பை இருப்பது போல் கொண்டாடி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் இத்தொடரில் பாகிஸ்தானுடன் கைகுலுக்காத இந்திய அணி பாகிஸ்தான் தலைவர் கையில் கோப்பையை வாங்கவில்லை என்று முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார். அந்த வகையில் மட்டமாக (ஃசீப்பான) நடந்து கொண்ட இந்தியா உலக கிரிக்கெட்டை டேமேஜ் செய்து நகைச்சுவையாக மாறியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
எனவே இந்தியாவுடன் இனிமேல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் விளையாடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அக்மல் பேசியது பின்வருமாறு. “இனிமேல் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் வாரியம் உடனடியாக சொல்ல வேண்டும். ஐசிசி என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்”
“இதை விட உங்களுக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும். தற்போது பிசிசிஐ நபர் ஐசிசி தலைவராக இருக்கிறார். அவர் (ஜெய் ஷா) எப்படி நடவடிக்கை எடுப்பார்? இந்த விஷயத்தில் மற்ற நாட்டு வாரியங்கள் ஒன்றாக சேர்ந்து இப்படிப்பட்ட கிரிக்கெட்டை நாம் பார்க்கக்கூடாது என்று சொல்ல வேண்டும். விளையாட்டு யாருடைய வீடாகவும் விளையாடக்கூடாது. இந்தியாவுக்கு எதிராக மற்ற நாடுகளும் விளையாடாமல் போனால் அவர்களுக்கு பணம் வராது”
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக ஹரிஷ் ரவூப் ரன் மெஷின்.. இதை செய்யாம முன்னேற முடியாது.. வாசிம் அக்ரம் சாடல்
“இந்தியாவிடமிருந்து இப்படிப்பட்ட மட்டமான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து பார்க்கிறோம். இந்தியா தங்களால் முடிந்தளவுக்கு இத்தொடரில் கிரிக்கெட்டை டேமேஜ் செய்துள்ளார்கள். ஆசிய மற்றும் பாகிஸ்தான் வாரிய தலைவர் அவர்களுக்கு கோப்பையை வழங்கலாமா வேண்டாமா என்பதில் சரியான முடிவை எடுத்துள்ளார். ஆசியக் கோப்பை தலைவர் கையால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். இந்தியா உலக கிரிக்கெட்டின் நகைச்சுவையாக மாறியுள்ளது” என்று கூறியுள்ளார்.