
வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம்.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணியின் உலககோப்பை தொடரின் வீரர்கள் பற்றிய தகவல்கள் கொண்ட உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அதிகாரபூர்வ அறிவிப்பினை பி.சி.சி.ஐ வரும் 15 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை இந்திய அணி குறித்து முன்னாள் தென்னாபிரிக்க வீரர் காலிஸ் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி தற்போது சிறந்த அணியாகவும், உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ள ஒரு அணியாகவும் உள்ளது. இப்போது இருக்கும் ஒரே குறை இந்திய 4அணியின் ஆவது இடத்தில் இறங்கும் பேட்ஸ்மனே. அந்த இடத்தில் இறங்க தினேஷ் கார்த்திக் தகுதியானவர் என்று நான் நினைக்கிறன்.
ஏனெனில், பல ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வரும் கார்த்திக் நல்ல அனுபவம் வாய்ந்தவர். மேலும், அவரது கிரிக்கெட்டிங் திறன், பேட்டிங் திறன் இன்னும் சிறப்பாகவே உள்ளது. இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெரிய தொடரில் பங்கேற்கும் போது அனுபவ வீரர்கள் நிச்சயம் அணிக்கு வேண்டும். எனவே, இந்திய அணியில் தினேஷ் கார்த்திகை சேர்க்க வேண்டும் என்று காலிஸ் கூறினார்.