டெல்லி அணியில் சிறப்பாக விளையாடும் பண்ட் இந்திய அணியில் விளையாடும்போது சொதப்புவதற்கு இதுதான் காரணம் – கைப் பேட்டி

pant
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது கடந்த வாரம் துவங்கி தொடங்கி நடந்து வருகிறது.

dhoni with pant

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கைப் இந்திய அணியின் இளம் வீரரான பண்ட் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

இந்திய அணியில் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடி வரும் பண்ட் அறிமுக தொடர்களில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி வந்தாலும், தற்போது கடந்த பல வருடங்களாக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் தொடர்ச்சியாக சொதப்பி வரும் அவர் தற்போது தற்காலிகமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.

Kaif

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அணியில் இடம்பெற்ற பண்ட் தற்போது சர்வதேச அணியில் திணறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பண்ட்டின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் குறித்து இந்த பேட்டியில் பேசிய கைப் கூறியதாவது : பண்ட் நிச்சயம் திறமை வாய்ந்த வீரர். அவர் டெல்லி அணியில் எப்போதும் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் இந்திய அணியில் அவர் தடுமாற்றத்திற்கு சிறிய காரணம் உள்ளது.

- Advertisement -

டெல்லி அணியில் விளையாடும் போது அவருக்கு இறுதி 10 ஓவர்களில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும். அவரை நாங்கள் நான்காவது வீரராக களம் இறக்கி விளையாட வைத்து வருகிறோம். அவரும் தனது பொறுப்பை உணர்ந்து 10 ஓவர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். தொடர்ச்சியாக அவர் ஒரே இடத்தில் இறக்கப் படுவதால் அவர் டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஆனால் இந்திய அணியில் அவருடைய இடம் இன்னும் நிர்ணயம் ஆகவில்லை. அதுவே அவரது இந்த தடுமாற்றத்திற்கு காரணம். ஒருவேளை அவருக்கு தொடர்ந்து ஒரே இடத்தில் வாய்ப்பு கிடைக்குமாயின் அவர் இந்திய அணியிலும் சாதிக்க வாய்ப்பு உள்ளது. பேட்டிங் இடம் காரணமாகவே அவரது பேட்டிங் தடுமாற்றம் கண்டுவிட்டது. அவருக்கு நிச்சயம் ஒரே இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்குமாயின் அவர் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் கைப் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement