இதை மட்டும் பண்ணா போதும் டி20 உலககோப்பை டீமில் இடம் உறுதி – இளம் வீரருக்கு ஊக்கம் கொடுத்த கைப்

Kaif

இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், ஜடேஜா போன்ற வீரர்களை கொண்ட முதன்மை அணியானது தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளதால் இளம் வீரர்களை கொண்ட தவான் தலைமையிலான இந்திய அணியை இலங்கை சுற்றுப் பயணத்திற்கு பிசிசிஐ அனுப்பியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் பல இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ind

மேலும் இந்த இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இனி வரும் தொடர்களில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த இலங்கை தொடரானது அனைவருக்கும் முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள ப்ரித்வி ஷா அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

நடைபெற்று ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் தொடரிலும் சரி, விஜய் ஹசாரே தொடரிலும் சரி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியின் தேர்வாளர்கள் கவனத்தை அவர் ஈர்த்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் அவர் பங்கேற்க வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

shaw-2

ப்ரித்வி ஷாவிற்கு இந்த இலங்கை தொடரானது ஒரு அருமையான வாய்ப்பாக உள்ளது. இந்த தொடரில் அவர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனாலும் அவர் மிகப்பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நான்கு துவக்க வீரர்கள் தயாராக உள்ளனர். இதன் காரணமாக அவர்களையும் மீறி ப்ரித்வி ஷா வாய்ப்பு பெற வேண்டுமெனில் பிரமாதமான அவர் வெளிப்படுத்தி ஆகவேண்டும்.

- Advertisement -

shaw 2

இதன் காரணமாக இலங்கை தொடரில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர் மிகப் பெரிய ஸ்கோரை அடிக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார் என்று முஹம்மது கைப் கூறியுள்ளார். கைப் கூறியது போலவே நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ப்ரித்வி ஷா, விஜய் ஹசாரே தொடரிலும் 8 போட்டிகளில் 800க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement