என் வாழ்நாளில் அப்படி ஒரு சிக்ஸரை பார்த்ததில்லை. தோனியுடனான அனுபவத்தை பகிர்ந்த – முகமது கைப்

Kaif
- Advertisement -

இந்திய அணியின் தலைச்சிறந்த கேப்டன் என்றால் நம் நினைவுக்கு விரைவில் தெரிபவர் எம் எஸ் தோனி என்றால் அது மிகையல்ல. தோனி 332 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதிக போட்டியில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, மூன்று விதமான போட்டிகளிலும் ஐ.சி.சி கோப்பைகளை பெற்றுத் தந்த ஒரே கேப்டன் எம்எஸ் தோனி. இவர் 2011 ஒருநாள் உலக கோப்பை, 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை இந்திய அணிக்காக பெற்றுத் தந்துள்ளார்.

Dhoni-1

- Advertisement -

தோனி 2004 டிசம்பர் 23-ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமாகினார். இந்த போட்டியில் எம்எஸ் தோனி தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் தோனி எந்த ஒரு ரன்களும் எடுக்காமல் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆக்கினார். அப்போது அந்த போட்டியில் முன்னாள் வீரர் முகமது கைப் 80 ரன்கள் குவிக்க இந்திய அணி மாபெரும் வெற்றியை பெற்றது.

தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் எம்எஸ் தோனி இந்த அளவிற்கு இந்திய அணியில் மாபெரும் உச்சத்தை அடைவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில் “ தோனியின் ஆட்டத்தை நான் முதன்முதலாக துலீப் கோப்பையில் தான் பார்த்திருக்கிறேன். இதன் பிறகு இந்தியா ஏ அணியில் இடம் பிடித்தார். அப்போது தான் எனது நண்பர் ஒருவர் தோனியின் ஆட்டத்தை பார்க்க சொன்னார்.

Kaif

அவரது பேட்டிங் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கிறது என்றார். இதன் பிறகு நானும் தோனி ஆட்டத்தை கவனித்தேன். அப்போது டோனி ஒரு சிக்ஸரை அடித்தார். அதுபோன்ற ஒரு சிக்ஸரை நான் என் வாழ்நாளில் அதுவரை பார்த்தது கிடையாது. அந்த சமயத்தில் நான், யுவராஜ் சிங், சேவாக் போன்றவர்கள் விளையாடிக் கொண்டிருந்தோம்.

நீண்ட முடியுடன் அதிரடியாக ஆடும் அவர் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர் என்று மட்டுமே நினைத்தேன். ஆனால் அப்போது நாங்கள் எம்எஸ் தோனி இந்த அளவிற்கு இந்திய அணியில் மாபெரும் உச்சத்தை அடைவார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று முகமது கைப் தனது அனுபவத்தை கூறியுள்ளார்.

Advertisement