தோனி விக்கெட் கீப்பிங்கை கற்றுக்கொண்டது இவரிடம் இருந்து தான் – கைப் ஓபன் டாக்

Kaif
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் கிரிக்கெட் டைரி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அவருடன் இந்திய அணிக்கு முன்னாள் வீரர்களான அஜித் அகர்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பலவற்றை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி அவரது கீப்பிங் ஸ்டைல் மற்றும் அவரது ஸ்டம்பிங் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது என்பது நாம் அறிந்ததே.

dhoni

அவரின் வேகமான மற்றும் துல்லியமான விக்கெட் கீப்பிங்கிற்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போதைய உலகின் தலை சிறந்த விக்கெட் கீப்பராக இருக்கும் வீரர்களில் தோனி ஒருவர். அந்த அளவிற்கு தோனி தற்போது டெக்னிக்கலாக செயல்பட்டு வருகிறா. அவரது கடுமையான பயிற்சியின் மூலமே இந்த திறமையை வளர்த்துக்கொண்டார்.’

- Advertisement -

இந்நிலையில் தற்போது தோனி தனது ஆரம்ப காலத்தில் விக்கெட்கீப்பிங் குறித்த நுணுக்கங்களை யாரிடம் கற்றுக் கொண்டார் என்பது குறித்து முகமது கைப் அந்த பேட்டியில் பேசினார். அதுகுறித்து அவர் கூறுகையில் : தோனியின் பேட்டிங்கை குறை சொல்பவர்கள் கூட அவரது விக்கெட் கீப்பிங் முறையைக் குறை சொல்ல முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு தோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Dravid

ஆனால் அவர் அறிமுகமான போது அந்த அளவிற்கு சிறந்த கீப்பராக இல்லை அவரது இந்த சிறப்பான விக்கெட் கீப்பிங்கிற்கு காரணம் டிராவிட் தான். டிராவிட்டிடம் இருந்து அவர் விக்கெட் கீப்பிங் குறித்த நுணுக்கங்கள் பலவற்றை தோனி கற்றுக் கொண்டார். எனவே டிராவிட் மூலமாகத்தான் தோனி இன்று கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுகிறார் என்று கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement