தோனி குறித்து யுவ்ராஜின் தந்தை கூறியது உண்மை என்று எனக்கு தோன்றவில்லை – கைப் ஓபன் டாக்

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தையும், பாலிவுட் நடிகருமான யோகிராஜ் சிங் தோனியின் மீது கடந்த பல ஆண்டுகளாகவே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசி வருகிறார். அண்மையில்கூட இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் தோனி மற்றும் கோலியுடன் சேர்ந்து தேர்வுகுக்ழுவினரும் யுவராஜை ஓரங்கட்டி விட்டனர் என்று தெரிவித்திருந்தார்.

Yograj

மேலும் சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சந்தித்தபோது அவர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அப்போது அவரிடம் சிறந்த வீரர்களை உரிய மரியாதையுடன் வழி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தேன். தோனி. கோலி. ரோகித் ஆகியோர் ஓய்வு பெறும்போது உரிய மரியாதை வழியனுப்ப வேண்டும். அவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக பல விஷயங்களை செய்துள்ளார்கள்.

ஆனால் யுவ்ராஜை ஒதுக்கி விட்டனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் ஹலோ ஆப்பிள் பேசிய முகமது கைஃப் இதுகுறித்து கூறுகையில் : தோனி கோலி குறித்து யுவ்ராஜின் தந்தை கூறும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்காது. ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பொறுத்தவரை யுவராஜ் எப்போதுமே ஒரு சாம்பியன் வீரர்தான் இருப்பினும் அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

Yuvraj 1

ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை அது எப்பொழுதும் எந்த வீரருக்கும் சரியாக அமைந்தது இல்லை. ஏனெனில் ஒரு சில போட்டிகள் சரியாக விளையாடவில்லை என்றால் உடனடியாக அவர்கள் ஓரம்கட்ட துவங்கிவிடுவார்கள். ஏனெனில் அடுத்து அணிக்குள் நுழைய திறமையான வீரர்கள் பலர் தயாராக இருப்பதால் ஓரங்கட்டப்பட்ட வீரர்கள் அனைத்து திரும்புவது என்பது எப்போதும் கடினமான ஒன்றுதான்.

- Advertisement -

மேலும் தோனி குறித்து பேசிய கைப் : தோனி இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக இருந்துள்ளார். அணி வீரர்களை தேர்வு செய்ததில் அவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஏனெனில் அதற்கு அவர் தகுதியானவர். அவர் அணியை வைத்து வெற்றி பெறவில்லை என்றால் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு இருக்கலாம்.

Yuvraj

ஆனால் அவருடைய அணி பல கோப்பைகளை வென்றுள்ளது, பல சாதனைகளை படைத்துள்ளது. அதனால் தேர்வுக்குழுவினர் அவருக்கு முழு சுதந்தரம் கொடுத்தது தவறு இல்லை என்றும் இது ஒரு சார்பின்மை அல்ல என்றும் தோனிக்கு ஆதராவாக கைப் பேசியது குறிப்பிடத்தக்கது.