இந்திய அணியின் 4 ஆம் இடத்திற்கு இவரே சரியான ஆள். விட்றாதீங்க – முகமது கைப் நம்பிக்கை

Kaif
- Advertisement -

இந்திய அணியின் டாப் ஆர்டர் மிகவும் பலமாக அமைந்தும் மிடில் ஆர்டரில் தொடர்ச்சியாக இந்திய அணி சறுக்கலையே சந்தித்து வந்தது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் தோல்விக்கு முக்கிய காரணமாக மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை இந்திய அணிக்கு பலவீனமாக அமைந்ததாக பார்க்கப்பட்டது அந்த அளவிற்கு மிடில் ஆர்டரில் இந்திய அணி மோசமாக செயல்பட்டு வருகிறது.

Rohith-2

- Advertisement -

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நான்காவது வீரராக இந்திய அணியில் விளையாடும் வீரர் குறித்த இடம் பெரும் சர்ச்சைக்குரிய வகையில் இருந்தது. நான்காவது வீரராக உலக கோப்பை முன்புவரை அம்பத்தி ராயுடுவை தயார் செய்த இந்திய அணி நிர்வாகம் அவரை உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யாமல் கழட்டி விட்டது. அதன் பிறகு அந்த இடத்தில் விஜய் சங்கர் தேர்வானார் ஆனால் அவர் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர் இல்லை என்பது பலரது கருத்தாக இருந்தது.

மேலும் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் மற்றும் மனிஷ் பாண்டே என பலரையும் நான்காமிடத்தில் சோதித்து பார்த்தும் அணிக்கு திருப்தியில்லை உலக கோப்பை தொடருக்குப் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். தான் தேர்வான இடத்திற்கு தகுந்தார்போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஐயர் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகிறார்.

Iyer-1

அதனால் அவரே இந்திய அணியின் 4-ஆம் நிலை வீரராக களமிறங்க வேண்டும் என்று பலரும் கூறி வந்த நிலையில் தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான முகமது கைப் அதே கருத்தினை கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ள அவர் அதில் கூறியதாவது :

- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். உள்ளூர் போட்டிகளில் இருந்து அவரை நான் பார்த்துகிறேன். பல வருடங்களாக சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்திய அணியில் பெரிதாக தற்போதுதான் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஐபிஎல் தொடரில் ஏற்கனவே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்து விட்டார். மேலும் தற்போது இந்திய அணியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

Iyer-1

மனதளவில் தான் எப்படி ஆட வேண்டும் என்று நினைத்து சிறப்பாக தகுதி ஆடும் தகுதி அவரிடம் உள்ளது. மேலும் கேப்டனாக ஐபிஎல் தொடரில் பல விடயங்களை கற்றுக் கொண்டு வருகிறார் என்று கைப் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணிக்கு நான்காம் இடத்தில் இவரை விட சரியான வீரர் கிடைக்க மாட்டார் என்றும் இவரை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement