என்னதான் கோலி பேட்டிங்கில சாதனை பண்ணி இருந்தாலும் இவரது பேட்டிங்கை பார்க்கத்தான் எனக்கு பிடிக்கும் – கைப் ஓபன் டாக்

Kaif

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சம காலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் கடந்த 13 வருடங்களாக இந்திய அணிக்காக இருவரும் ஆடி வருகின்றனர். இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான திறமையைக் கொண்டு இருந்தாலும், விராட் கோலி ஒரு சில விஷயங்களில் ரோகித் சர்மாவை மிஞ்சி விடுகிறார். இதனால்தான் மூன்று விதமான போட்டிகளிலும் அவர் சாதித்து வருகிறார்.

Rohith

அதே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலியை மிஞ்சும் அளவில் துவக்க வீரராக அசத்தி வருகிறார் ரோஹித் சர்மா. தற்போதுவரை மூன்று இரட்டை சதங்களை விளாசியுள்ளார். அதே நேரத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 4 சதங்கள் விளாசியுள்ளார். இந்த நிலையில் இருவரும் வேறுவேறு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினால் தான் யாருடைய ஆட்டத்தை பார்க்க போவேன் என்று இந்தியாவின் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் : ஒரே நாளில் இருவரும் வேறுவேறு மைதானத்தில் வேறுவேறு போட்டியில் விளையாடினால் ரோகித் சர்மா ஆடும் மைதானத்திற்கு தான் செல்வேன். விராட் கோலி தலைசிறந்த வீரர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் தான் நளினம், அழகு , எளிமை, ஆகிய பலவும் இருக்கும்.

Kaif

ரோஹித் சர்மா பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்குவார். ஆனால் அது பந்துவீச்சாளர்களுக்கே தெரியாது அந்த அளவிற்கு ரோஹித்தின் பேட்டிங் மிகவும் எளிமையாக இருக்கும். இதனால் அவர் ஆடுவதைப் பார்க்க தான் செல்வேன் என்று கூறியுள்ளார் முகமது கைஃப். இதனால் கோலியை விட ரோஹித்தின் பேட்டிங்கே கைப்புக்கு பிடிக்கும் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக இரு அணிகளை வைத்து கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் இங்கிலாந்து மற்றும் இதர அணிகள் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்திய நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை.

Rohith-2

அதுமட்டுமின்றி கடந்த நாட்களாக இந்திய அணி சார்பாக வெளியான தகவலில் கோலி இனி டெஸ்ட் அணிகளுக்கு மட்டுமே கேப்டனாக செயல்படுவார் என்றும், டி20 அணிக்கு ராகுலும் மற்றும் ஒருநாள் அணிக்கு ரோஹித்தும் கேப்டனாக செயல்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.