இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? பயப்படாம அந்த உண்மையை சொல்லுங்க.. அகர்கரை சாடிய ஸ்ரீகாந்த்

Srikkanth 3
- Advertisement -

ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா கழற்றி விடப்பட்டு சூரியகுமார் நியமிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் 2022 ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே பாண்டியா கேப்டனாக குஜராத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அதன் காரணமாக அவரை அடுத்த கேப்டனாக வளர்க்க தேர்வுக் குழுவினர் முயற்சித்தார்கள்.

அதனாலேயே 2022க்குப்பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். அத்துடன் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையிலும் துணை கேப்டனாக செயல்பட்ட பாண்டியா வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியாவிடமிருந்து துணை கேப்டன்ஷிப் பதவியை கூட பறித்துள்ள தேர்வுக்குழு சூர்யகுமாரை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

உண்மையை சொல்லுங்க:
அதற்கு ஹர்திக் பாண்டியா முழுமையான ஃபிட்னஸை கொண்டிருக்கவில்லை என்பதால் புதிய பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பரிந்துரையில் சூரியகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை விரும்பவில்லை என்பதால் கேப்டன் பதவியிலிருந்து நீக்குகிறோம் என்ற உண்மையை வெளிப்படையாக சொல்லுங்கள் என அஜித் அகர்கரை முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

அதை விட்டுவிட்டு ஐபிஎல் 2024 தொடரில் முழுமையாக விளையாடி டி20 உலகக் கோப்பை வெற்றியிலும் பங்காற்றிய பாண்டியா ஃபிட்டாக இல்லை என்று சொல்வதை நம்ப முடியவில்லை என ஸ்ரீகாந்த் சாடியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தேர்வுக்குழுவினர் உடைமாற்றும் அறையில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சென்றுள்ளார்கள் என்று நினைக்கிறேன். அது ஐபிஎல் தொடரிலிருந்து வந்திருக்க வேண்டும்”

- Advertisement -

“சுமாரான ஃபிட்னஸ் என்ற காரணத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடிய பாண்டியா பந்தும் வீசினார். ஆம் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி வரவில்லை என்பது வேறு கதை. இருப்பினும் அதே பாண்டியா உலகக் கோப்பையில் துணை கேப்டனாக சிறப்பாக விளையாடினார்”

இதையும் படிங்க: பெரிய இழப்பை சந்திச்சுருக்காங்க.. அதை யூஸ் பண்ணி இந்தியாவை வீழ்த்துவோம்.. இலங்கை கோச் ஜெயசூர்யா உறுதி

“எனவே சுமாரான ஃபிட்னஸ் என்று சொல்லும் காரணத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். சூரியகுமார் சிறந்த மனிதர். பாண்டியாவைப் போலவே அவரையும் நான் விரும்புகிறேன். ஆனால் “ஹர்திக் பாண்டியாவை நாங்கள் கேப்டன் பதவியிலிருந்து நீக்குகிறோம். வருங்காலத்தை கருத்தில் கொண்டு சூரியகுமாரை கேப்டனாக நியமிக்கிறோம்” என்ற உண்மையை தேர்வுக் குழுவினர் நேரடியாக சொல்லியிருக்கலாம். இந்த உண்மையை நீங்கள் பயமின்றி சொல்லுங்கள்” என்று கூறினார்.

Advertisement