- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அஸ்வினையே மதிக்கல.. இதெல்லாம் ஒரு ஸ்லெட்ஜிங்கா? குப்பை போல செயல்பட்ட சிராஜை விளாசிய ஸ்ரீகாந்த்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது. அப்போட்டியில் 140 (141) ரன்கள் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அவரை அவுட்டாக்கிய முகமது சிராஜ் வெளியே செல்லுங்கள் என்ற வகையில் கோபத்துடன் வழி அனுப்பினார். அதற்கு டிராவிஸ் ஹெட்டும் சில வார்த்தைகளை சொல்லிக்கொண்டே கோபமாக வெளியேறினார். மறுபுறம் அடிலெய்ட் ரசிகர்கள் தங்கள் நாட்டு வீரரை அப்படி கோபத்துடன் அனுப்பிய சிராஜுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

- Advertisement -

இதெல்லாம் ஸ்லெட்ஜிங்கா:

அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்தப் போட்டியில் 500 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வினை கூட மதிக்காமல் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடித்ததாக முன்னாள் கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். அப்படி சிறப்பாக விளையாடிய ஹெட்டை பாராட்டாமல் அவ்வாறு கோபத்துடன் அனுப்பியதற்கு பெயர் ஸ்லெட்ஜிங் கிடையாது என்று சிராஜை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹெட் நம்முடைய பவுலர்களை இரக்கமின்றி அடித்து நொறுக்கியுள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு எதிராக இப்படி நடந்து கொண்ட சிராஜ் உங்களுக்கு மூளை இல்லையா? என்ன செய்கிறீர்கள்? பைத்தியம் பிடித்து விட்டதா? அவர் உங்களை வலது, இடது, மையம் உட்பட அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கினார்”

- Advertisement -

ஸ்ரீகாந்த் விளாசல்:

“140 ரன்கள் எடுத்ததில் அவர் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் சிரமமின்றி அடித்தார். அப்படி விளையாடிய பின் நீங்கள் இப்படி அனுப்புவதற்கு பெயர் ஸ்லெட்ஜிங்கா? இது வெறும் குப்பை. இது வெறும் பைத்தியக்காரத்தனம். 140 ரன்கள் அடித்த ஒரு பேட்ஸ்மேனுக்கு நீங்கள் பாராட்டு கொடுங்கள். அதை விட்டுவிட்டு ஏன் இப்படி அனுப்புகிறீர்கள்?”

இதையும் படிங்க: 109 ரன்ஸ்.. 5க்கு 5.. ஒய்ட் வாஷ் வெற்றியால் இலங்கை கனவை உடைத்த தெ.ஆ.. இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி

“ஒருவேளை நீங்கள் திட்டம் போட்டு அவரை 10 அல்லது 0 ரன்களில் அவுட்டாக்கி இருந்தால் அப்படி செய்யலாம். ஆனால் உங்களை அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் 141 பந்துகளில் 140 ரன்களை குவித்தார். அவர் அஸ்வினை ஒரு ஸ்பின்னராகவே மதிக்காமல் இறங்கி சென்று சிக்ஸர் அடித்தார்” என்று கூறினார். இறுதியில் அதே போட்டியில் அவரிடம் சென்ற சிராஜ் தவறாக புரிந்து கொண்டதாக சமாதானமாக பேசினார். மேலும் போட்டியின் முடிவில் சிராஜ் – ஹெட் ஆகியோர் இருவருமே கை கொடுத்து ஜென்டில்மேன்களாக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -