குல்தீப் ஆடிருந்தா இந்தியா ஜெய்ச்சுருக்கும்.. இனியாச்சும் அவருக்கு பதில் டீம்ல எடுங்க.. ஸ்ரீகாந்த் சாடல்

K Srikkanth
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது. குறிப்பாக 2வது போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் போராடி 264/9 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 46.2 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து போராடி வெற்றி பெற்றது. இந்நிலையில் ஒருவேளை அப்போட்டியில் விளையாடியிருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றிருக்கும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். ஏனெனில் அடிலெய்ட் மைதானத்தில் 4 விக்கெட்டுகளை எடுத்த ஆஸ்திரேலியாவின் முதன்மை ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா போல குல்தீப் யாதவும் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்திருப்பார் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குல்தீப் கண்டிப்பாக விளையாடனும்:

எனவே கடைசி போட்டியிலாவது அரைகுறையாக பந்து வீசும் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக அவரை விளையாட வைக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவ் விளையாட வேண்டும். அதற்காக நீங்கள் நித்திஷ் ரெட்டி அல்லது வேறு யாரையாவது நீக்க வேண்டுமா? என்பது எனக்குத் தெரியாது”

“நித்திஷ் ரெட்டி தன்னுடைய தகுதியற்ற பந்து வீச்சை வைத்துக் கொண்டு விளையாடினால் அடித்து நொறுக்கப்படுவார். பேட்டிங்கில் திறமைக் கொண்ட அவர் சிக்ஸர்களை அடிக்கக்கூடியவர். ஆனால் அவர் குறைவான பந்துகள் இருக்கும் போது தான் பேட்டிங் செய்ய வருகிறார். எனவே நீங்கள் 8, 9வது இடங்களில் ஹர்ஷித் ராணா, குல்தீப் ஆகியோரை விளையாட வைக்க வேண்டும். 2வது போட்டியில் ராணா பேட்டிங் செய்த விதத்தை நான் விரும்புகிறேன்”

- Advertisement -

ஸ்ரீகாந்த் சாடல்:

“அவருடைய பேட்டிங் அணுகு முறையை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே நீங்கள் அவரை வைத்துக் கொண்டு நித்திஷ் ரெட்டியை நீக்கி விட்டு குல்தீப்பை விளையாட வைக்கலாம். 2 விக்கெட்டுகள் எடுத்த ராணாவை உங்களால் நீக்க முடியாது. ஒருவேளை குல்தீப் விளையாடியிருந்தால் இந்தியா கண்டிப்பாக இன்று வெற்றி பெற்றிருக்கும். ஏனெனில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சுழலுக்கு எதிராக குழுவின்றி தடுமாறினார்கள்”

இதையும் படிங்க: இந்தியாவின் தோல்விக்கு குல்தீப் இல்லாததே காரணம்.. இப்போவாச்சும் அதை தியாகம் செய்ங்க கம்பீர்.. வருண் ஆரோன

“ஆஸ்திரேலியா 187/5 என தடுமாறிய போது இந்தியாவுக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பிருந்தது. அப்போது அக்சர், சுந்தர் ஆகியோரை தொடர்ச்சியாக பந்து வீச வைக்காமல் இந்தியா தவறு செய்தது. அவர்கள் அடி வாங்கினாலும் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார்கள். குல்தீப் விளையாடாமல் இருப்பதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement