கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் சஞ்சு சாம்சன் 2015இல் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். 2021 வரை தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறாத அவர் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தவில்லை. இருப்பினும் 2022க்குப்பின் ஓரளவு அசத்தத் துவங்கிய அவருக்கு புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்ததும் டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார்.
அந்த வாய்ப்பில் ஒரு சில போட்டிகளுக்குப் பின் பட்டாசாக விளையாடிய சாம்சன் டி20 கிரிக்கெட்டில் சதத்தை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார். அத்துடன் தென்னாப்பிரிக்காவில் சதத்தை அடித்த அவர் ஓப்பனிங்கில் மொத்தம் 3 சதங்கள் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அப்படி ஒருவழியாக அவர் ஓப்பனிங்கில் தொடர்ச்சியாக அசத்தியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
அதிர்ஷ்டமில்லாத சாம்சன்:
அப்போது 2025 ஆசியக் கோப்பையில் சுப்மன் கில்லை தேர்வுக்குழு துணை கேப்டனாக தேர்ந்தெடுத்தது. அதனால் சாம்சனை மிடில் ஆர்டருக்கு அனுப்பிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவருக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் சுப்மன் கில் இதுவரை பெரிய ரன்கள் அடிக்கவில்லை. மறுபுறம் கிடைத்த இடத்தில் அமைதியுடன் விளையாடும் சாம்சன் 2025 ஆசியக் கோப்பை ஃபைனலில் முக்கிய ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார்.
இந்நிலையில் அதிர்ஷ்டமில்லாத சஞ்சு சாம்சனை விட்டால் 11வது இடத்தில் கௌதம் கம்பீர் பேட்டிங் செய்ய சொல்வார் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அதை எதிர்த்து பேசினால் மொத்தமாக கழற்றி விடப்படுவோம் என்பதை அறிந்த சாம்சன் மிடில் ஆர்டரில் அசத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
வேற வழியில்லை:
“சஞ்சு சாம்சன் மிகவும் அதிர்ஷ்டம் இல்லாதவர். ஏனெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சதங்கள் அடித்த அவரை தற்போது 3 – 8 ஆகிய இடங்களில் எங்கே வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய அனுப்புகிறார்கள். ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் அவரை அவர்கள் 11வது இடத்தில் கூட பேட்டிங் செய்ய அனுப்புவார்கள். டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடியும் இப்படி நடத்தப்படுவது சாம்சன் போன்றவருக்கு மோசமான உணர்வைக் கொடுக்கும்”
இதையும் படிங்க: 17 வயதில் சோகம்.. பில் ஹுக்ஸ்க்கு போல இயற்கை எய்திய இளம் ஆஸி வீரர்.. ரசிகர்கள் வேதனை
“ஆனால் அவருக்கு வேறு வழியில்லை. வாயை மூடிக்கொண்டு இந்திய அணி சொல்லும் இடத்தில் அவர் பேட்டிங் செய்தாக வேண்டும். மிடில் ஆர்டரில் சாம்சன் செய்த ஒரே நல்ல விஷயம் என்னவெனில் ஆசியக் கோப்பையில் 5வது இடத்தில் நன்றாக விளையாடினார். அது நல்ல அறிகுறி. ஏனெனில் 2026 டி20 உலகக் கோப்பைக்கு அவர் ஆட்டோமேட்டிக் விக்கெட் கீப்பர் தேர்வாக இருப்பார்” என்று கூறினார்.



