- Advertisement -
ஐ.பி.எல்

2007 தோனி மாதிரி படிதார் வெச்சு முடிவெடுத்துருக்காங்க.. கோலி வேணாம்ன்னு சொல்லிருப்பாரு.. ஸ்ரீகாந்த் பேட்டி

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களுடைய புதிய கேப்டனாக ரஜத் படிதார் செயல்படுவார் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று அறிவித்தது. கடந்த சில வருடங்களாக பெங்களூரு அணிக்காக விளையாடும் அவர் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் 2024 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் அபாரமாக பேட்டிங் செய்த அவர் கேப்டனாக மத்திய பிரதேசத்தை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார்.

அதன் காரணமாக அவரை பெங்களூரு அணி தங்களுடைய அடுத்த கேப்டனாக நியமித்திருக்கும் என்றே சொல்லலாம். இருப்பினும் பெரும்பாலான பெங்களூரு ரசிகர்கள் விராட் கோலி தான் மீண்டும் கேப்டனாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். ஆனால் அது நடைபெறாததால் பெங்களூரு ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்கள் என்றே சொல்லலாம்.

- Advertisement -

வேணாம்ன்னு சொல்லிருப்பாரு:

இந்நிலையில் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக விராட் கோலி தான் பெங்களூரு அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை வேண்டாம் என்று சொல்லியிருப்பார் என கிரிஸ் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். மேலும் 2007இல் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டது போல் ரஜத் படிதார் நியமனம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலி தான் கேப்டன்ஷிப் பொறுப்பு வேண்டாம் என்று சொல்லி இருப்பார் என நினைக்கிறேன். நான் பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்திருக்கலாம். இந்த முடிவு விராட் கோலியிடம் விவாதித்த பின்பே பெங்களூரு அணியில் எடுக்கப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன். ரஜத் இந்த பொறுப்புக்கு நல்ல தேர்வு. அவர் ஐபிஎல் தொடரில் நன்றாக செயல்பட்டு வருகிறார்”

- Advertisement -

தோனி போல:

“அவர் மீது நிறைய எதிர்பார்ப்பு இல்லை என்பது இந்த அறிவிப்பில் நல்ல விஷயமாகும். நாங்கள் தோனியை 2007 டி20 உலகக் கோப்பையின் கேப்டனாக நியமித்த போது அவர் மீதும் இந்திய அணியும் மீதும் நிறைய எதிர்பார்ப்புகள் இல்லை. இந்த முடிவும் கொஞ்சம் அது போலவே இருக்கிறது. அதாவது கேப்டனாக ரஜத் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருக்காது. எனவே அழுத்தமில்லாமல் அவர் தனது சொந்த வழியில் முடிவுகளை எடுக்கக்கூடும்”

இதையும் படிங்க: அது மாதிரி பும்ரா இடத்தில் அர்ஷ்தீப்பால் அசத்த முடியாது.. எதிரணிகள் அடிச்சு நொருக்கலாம்.. டேவிட் லாய்ட்

“அவர் தனக்கு ஆலோசகராக இருக்கக்கூடிய விராட் கோலியிடம் முக்கிய விஷயங்களை விவாதிப்பார்” என்று கூறினார். முன்னதாக விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை பெங்களூரு கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்கள் இருந்தன. அதனாலேயே 2022 தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை விராட் கோலி துறந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -