கோலி வெற்றிக்கான கோப்பையை என்னிடம் கொடுத்து இதைத்தான் கூறினார் – மனம்திறந்த இளம்வீரர்

Ind
- Advertisement -

இந்திய அணி தற்போது நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் அணியில் இருந்து விலக்கப்பட்டு சையத் முஷ்டக் அலி கோப்பை தொடரில் விளையாட அனுப்பப்பட்டார். அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக கே எஸ் பரத் என்பவரை அணியில் சேர்ப்தது இந்திய அணி நிர்வாகம்.

ind 1

- Advertisement -

மேலும் அவர் இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது அணி வீரர்களுடன் மைதானத்தில் இருந்தார். வங்கதேச அணிக்கு எதிரான கோப்பையை வாங்கியவுடன் அந்த வெற்றிக் கோப்பையை கேப்டன் கோலி கொண்டுவந்து சென்று பரத்திடம் கொடுத்தார். மேலும் மைதானம் முழுவதும் பரத்தே இந்திய அணியின் கோப்பையை கையில் ஏந்தி சென்றார். இந்நிலையில் தற்போது கோலி கோப்பையை அவர் கையில் கொடுத்தது பற்றி இளம் வீரரான கே.எஸ் பரத் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

போட்டி முடிந்ததும் விராட்கோலி என்னிடம் வந்து கோப்பையை என் கைகளில் தந்தார். கோப்பையை கையில் வாங்கும் போது நான் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றேன். அப்போது கோலி என்னிடம் இது ஒரு சிறிய வரவேற்பு தான் இந்திய அணிக்கு உங்களை மனதார வரவேற்கிறேன். இந்த தருணத்தை நீ மகிழ்ச்சியாக கொண்டாடு என்று என்னிடம் கூறினார். மேலும் என் அருகில் இருந்த ரோகித் சர்மா இது உனக்கான நேரம் அனுபவித்துக் கொள் என்று என்னை வாழ்த்தினார்.

Cup

கோப்பையை கையில் ஏந்தி வந்த போது எனது பெற்றோர் என்னை பார்த்து மிகவும் பெருமைப்பட்டு இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்த தருணத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது மேலும் ஒரே அறையில் இந்திய அணி வீரர்களுடன் இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான ஒரு விடயமாகும் இந்த நாளை நான் வாழ்வில் மறக்க மாட்டேன் என்றும் பரத் கூறினார்.

Advertisement