இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் இவர்தான்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ட்வீட்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் அடுத்த இரண்டாவது போட்டி நாளை 8 ஆம் தேதி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற உள்ளது.

iyer

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட நாட்களாக சரியான ஒரு இடம் கிடைக்காமல், திறமையிருந்தும் வாய்பு கிடைக்கும் போதெல்லாம் அற்புதமாக ஆடி வருபவர் ராகுல். ஓப்பனிங் முதல் 6வது இடம் வரை அனைத்து இடத்திலும் நன்றாக விளையாடி தனது திறமையை மீண்டும் ஆழமாக காண்பித்துள்ளார் ராகுல்.

- Advertisement -

எங்கு இறக்கி விட்டாலும் அந்த இடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு விளாசித் தள்ளுகிறார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது அற்புதமாக ஆடி 88 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் வீசிய பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ் ஒன்றினை அடித்திருந்தார். மேலும் பல வகையிலான ஷாட்களும் அவர் அடித்திருந்தார்.

இந்நிலையில் கேஎல் ராகுல் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ட்வீட் ஒன்றினை செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : கேஎல் ராகுல் 360 டிகிரி பேட்டிங்கை கூட கிளாசாக ஆடுகிறார். அந்த திறமை இந்திய அணியில் இவர் ஒருவருக்கு தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement