
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது அடுத்ததாக நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டு தோல்வியை சந்தித்து இந்த தொடரில் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடாதது பெரிய பின்னடைவு தந்துள்ளது. ஆனாலும் இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் செயல்பாடு இந்த தொடரில் தனிப்பட்ட வகையில் பிரமாதமாக இருந்து வருகிறது.
பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது சதம் அடித்த அவர் மெல்போன் நகரில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களுமே 80 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தடுமாறிய இந்த மைதானத்தில் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி இந்திய மண்ணில் மிகச் சிறப்பாக விளையாடும் அவர் ஆஸ்திரேலியா மண்ணில் என்ன செய்யப்போகிறார் என்பது போன்ற சில விமர்சனங்களும் அவர் மீது இந்த ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக இருந்த வேளையில் இந்த ஆஸ்திரேலியா தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவர்களது விமர்சனத்திற்கும் ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி டெஸ்ட் அணியின் நிரந்தர துவக்க வீரராகவும் அவர் இந்த செயல்பாட்டின் மூலம் தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்நிலையில் ஜெய்ஸ்வாலின் சிறு வயது பயிற்சியாளரான ஜுவாலா சிங் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜெய்ஸ்வால் குறித்து பேசுகையில் கூறியதாவது : ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸ்களுமே சதம் அடித்தால் அது மிகப்பெரிய சாதனை.
ஆனால் துரதிஷ்டவசமாக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் அதனை தவறவிட்டு விட்டார். இந்த ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக ஜெய்ஸ்வால் எவ்வாறு ஆஸ்திரேலியாவில் விளையாடப்போகிறார் என்பது குறித்த பெரிய விவாதம் இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் ஜெய்ஸ்வால் தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். நான் எப்பொழுதுமே அவருக்கு சொல்வது ஒன்றுதான். பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும் என்றால் :
இதையும் படிங்க : டெஸ்ட் டீமுக்கு அவர் வேணும் அடம்பிடித்த கம்பீர்.. விடாப்பிடியாக மறுத்த அகார்கர் – நடந்தது என்ன?
திறமை, தன்னம்பிக்கை, உடற்பகுதி, புத்திசாலித்தனம் இது நான்கும் வேண்டும் என்று சொல்வேன். அந்த நான்குமே ஜெய்ஸ்வாலிடம் இருக்கிறது. அதுதான் அவர் ஆஸ்திரேலியா மண்ணிலும் வெற்றிபெற காரணம். என்னுடைய மாணவரான ஜெயஸ்வாலை ஆஸ்திரேலிய மண்ணில் ரன் அடிப்பாரா? என்ற சந்தேகத்துடன் பலர் பார்த்தார்கள். ஆனால் அவருடைய திறமை என்ன என்பதை தற்போது அவர் நிரூபித்தும் காட்டியுள்ளார் என ஜுவாலா சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.